Saturday, 14 June 2008

வளரும் தமிழ் மூடர்கள்

வளரும் தமிழ் மூடர்கள்
(இந்த கட்டுரை எழுதிய ஆண்டு 1998)


பிறந்த நாளிலிருந்து நான் தமிழ் காற்றை சுவாசிக்கிறேன். தமிழ்
மண்ணில் தவழ்ந்து நடக்கக் கற்றேன். என் தாயாரிடம் நான் முதலில்
கற்ற வார்த்தை "மம்மி". பிறகு நான் அழைக்க கற்றுக் கொண்டது
"டாடி".

அகர முதல எழுத்தை விட எனக்கு "twinkile twinkle little star.." கற்றுக்
கொடுத்தார்கள். எங்கள் பக்கத்து வீட்டு மேதாவி "what is your name ?"
என்பதற்கு நான் "my name is george bush" என்று நான் எனக்கு கற்று
கொடுத்ததை கூறியவுடன் அவர் என்னை "very very goooooooddd..." என்று
உற்சாகப் படுத்தியவுடன் மகிழ்ந்து போனேன்.

"matriculation school" தந்த "அறிவு ஒளி" யால் தாமஸ் ஆல்வா எடிசன்
எவ்வளவு பெரிய மேதாவி என்றறிந்தேன். அமெரிக்கர்களின் விண்வெளி
சாதனைகளையும் அணுவை பிளந்து சக்தி பெற்றதையும் கண்டு வியந்தேன்.
அந்த சொர்க்க நாட்டிற்கு செல்ல ஏராளமான ஏக்கத்தை நம்
சமுதாயத்தில் பெற்றேன்.

இந்தியாவிலிருந்து வீசிய கணிப்பொறி காற்றில் ஓர் தூசியாக நானும்
அமெரிக்கா சென்றேன்.

ஆகா... என்னே மேலை நாட்டவர்களின் திறமை ? அவர்களின்
அறிவுத்திறனென்ன... எதை செய்தாலும் அதை சிறப்பாகச் செய்வதில்
ஈடுஇணையுண்டோ ? மேலை நாடுகளில் வாழ்பவர்கள் பாக்கியவான்கள்.
நம் நாட்டில் வாழ்பவர்கள் துர்அதிர்ஷ்டசாலிகள் என்று எண்ணிணேன்.

காலம் சுழன்றது. என் மனப்பக்குவம் வளரத் தொடங்கியது.

உலக வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினேன். ஒவ்வொரு மனித
கூட்டத்தின் குணங்களை உணரத் தொடங்கினேன்.

நம் நாட்டில் நம் முன்னோர்கள் 5000 ஆண்டிற்கும் மேல் வாழ்ந்த
வாழ்க்கையின் அனுபவத்தினை உணர்ந்தேன். அமெரிக்கர்கள் வெறும்
400 ஆண்டுகளில் கட்டிய உலகத்தையும் அறிந்து கொண்டேன்.
அவர்களின் ஆதிக்க வெறி, பொருளாதாரத்தை வைத்து உலகை
ஏமாற்றும் விதம் போன்ற அமெரிக்கர்களின் மறு பக்கத்தை பார்க்க
ஆரம்பித்தேன்.

என் பிறப்பின் சிறப்பையும், என் குலத்தின் பெருமையையும் உணரத்
தொடங்கினேன். நான் வளர்ந்து வந்த பாதையைப் பார்த்து மனம்
குமுறினேன்.

முதலில் george bush என்ற என் பெயரை அகத்தியன் என்று மாற்றினேன்.
தமிழகத்திலிருந்து தமிழ் இலக்கண இலக்கியங்கள் எடுத்து வந்து
கற்க ஆரம்பித்தேன். என் வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் இனி
தமிழின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவதென தீர்மானித்து இப்போது
செயல் பட்டுக் கொண்டிருக்கிறேன்.

தமிழ் தந்த காற்றை சுவாசித்த நான் ஆங்கிலம், சீனம் போன்ற பிற
மொழி பயின்றாலும் என் இறுதி மூச்சு இருக்கும் வரை தமிழின்
முன்னேற்றத்திற்கு பாடுபட்டு, பிறர்க்கும் முன்னோடியாக திகழவேண்டும்
என்பதை மனதில் தின்னமாக வைத்துக் கொண்டேன்.

ஆனால், இந்த பொழுது, என்னைப் போல் அறியாமையினால்
வளர்ந்து கொண்டிருக்கும் பற்பல தமிழர்களை எண்ணினால் மிகவும்
வருத்தமாக இருக்கிறது. பணத்திற்காகவும், அறியாமையினாலும்
அவர்களை வளர்த்து விடுபவர்களை எண்ணினால் கோபம் வருகிறது.
ஆனாலும், என்னைப்போல் அவர்களும் ஒரு நாள் வரலாற்றின்
கதவுகளைத் திறந்து பார்க்கும் போது உண்மை உணர்வார்கள் என்ற
நம்பிக்கையோடு இன்று இரவு படுக்கைகுச் செல்கிறேன்.

அகத்தியன்.


(இந்த கட்டுரை எழுதி இப்போது 10 ஆண்டுகளாகிவிட்டது. இப்போது தமிழ் நாடு முழுவதையும் ஆங்கிலம் பேச வைத்து முட்டாள் தேசமாக மாற்றிவிட்டார்கள்)

தமிழ் நாடு என்ன முட்டாள் தேசமா ?

தமிழ்நாடு என்ன முட்டாள் தேசமா ?

சென்னை முழுவதையும் ஆங்கிலத்துக்கு மாற்றி விட்டார்கள் நம் சகோதரர்கள். தமிழே பேசும் மக்களையும் ஏளனமாக பார்க்கிறார்கள்.

படிக்காத மூடன் இன்று படித்தவனாகிவிட்டான். ஆனால், இவன் பண்பில்லாத மிருகமாக திரிகிறான். தமிழ் சமுதாயம் தம் சுய அறிவினால் வளரவில்லை. மாறாக மேற்கத்தியவர்களைப் பார்த்து காப்பியடித்து அவர்களின் அடிமைகளாகவே வளர்ந்திருக்கிறார்கள். சுயசிந்தனையை தராத கல்வியை திணித்திருக்கிறார்கள். இப்போது இந்த படித்த பண்பில்லாதவன் சென்னை மட்டுமல்லாது, கோவை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற எல்லா நகரங்களுக்கும் சென்றுவிட்டான். இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் படித்தவன் மட்டும் தான் ஆங்கிலம் பேசினான். ஆனால் இன்று எல்லா தர மக்களும் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்கள். ஆங்கிலம் பேசுவது தவறல்ல. ஆங்கிலம் மட்டுமே பேசுவது தான் தவறு. ஆங்கிலத்தை எங்கு எப்போது யாரிடம் எதற்காக பயன்படுத்த வேண்டும் என்று பொது அறிவை (Common Sense) பயன்படுத்தி பயன்படுத்த வேண்டும். அதைவிடுத்து தமிழை மறந்து எல்லா இடங்களிலும் பயன்படுத்துவது முட்டாள்தனமல்லவா ?

ஆங்கிலம் பேசினால் மட்டும் வெள்ளைக்காரனாகி விட முடியுமா ?
வெள்ளைக்காரனைப் போல் ஆக வேண்டுமெனில், முதலில் அவனைப் போல் சிந்திக்க வேண்டும்.அப்படி சிந்திக்க ஆரம்பித்தால் முதலில் எங்கும் தமிழைத் தான் பயன்படுத்துவான் மரத்தமிழன்.

ஆங்கிலம் கற்பதற்கு வெறும் ஆறு மாதங்களே போதும். திறமையில்லாதவன் கூட ஆங்கிலத்தை 2 ஆண்டுகளில் கற்று கொண்டுவிட முடியும். ஆங்கிலம் கற்பதற்காக தமிழை அழிப்பது மகா மூடத்தனம். ஆங்கிலத்தை வெறும் வியாபார கருவியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

உண்மையான தமிழர்கள் இப்போது தமிழ் நாட்டில் செத்துக் கொண்டே வருகிறார்கள். சில உண்மையான தமிழர்கள் வேறு நாடுகளில் இருக்கிறார்கள். ஆங்கிலமே பேசினாலும் இவனை வெள்ளைக்காரன் என்று வெள்ளைக்காரன் ஏற்று கொள்ள மாட்டான். இதனால் இவர்கள் புதுவித கலப்பு வம்சமாக திகழ்கிறார்கள். இந்த கலப்பு வம்சாவளியை கொண்ட நாட்டிற்கு தமிழ்நாடு என்பது பெயர் பொருத்தமில்லை. இதற்கு தமிழ் நாட்டை இப்போது முட்டாள் தேசம் என்று பெயர் மாற்றினால் வெகு பொருத்தமாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

Monday, 10 December 2007

தமிழ் மறுமலர்ச்சி கொள்கை - இன்று தேவை

தமிழ் மறுமலர்ச்சி கொள்கை
தமிழ் வளர்க.. தமிழ் வாழ்க.. தமிழே நீ நீடூழி வாழ்க..

தமிழ் மறுமலர்ச்சிக் கொள்கை

(இக்கட்டுரை 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எழுதப்பட்டது)

இக்கட்டுரைக்கு முன் என்னைப்பற்றி ஒரு சிறு குறிப்பு-நான் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவனும் இல்லை. நான் பிறந்த நாளிலிருந்து இன்று வரை கிட்டதிட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மொழி எத்தகைய மாற்றத்தைக் கண்டுள்ளது என்பதை கண்கூடாக கண்ட உண்மைகளை மட்டுமே இங்கு கொடுக்கிறேன். மேலும் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் தமிழைக் காக்க யாது செய்ய வேண்டும் என்பதை மட்டுமே இக்கட்டுரை ஆய்கிறது. தமிழ் மக்கள் பிறரையும் அவர்களின் மொழியினையும் மதித்து நடத்தல் மிக அவசியம். உதாரணமாக.. பெங்களூரூவில் கன்னடர்களையும் கன்னடத்தையும் மதித்து போற்றி உரிய மரியாதை செலுத்துவது தமிழர்களின் கடமை. என் வார்த்தைகள் இங்கு சற்று கடுமையாகவே இருக்கும். ஆனால் உண்மை, அதை விடக் கடுமையாக இருக்கிறது. எனவே, என் கடுமையான வார்த்தைகளுக்கு என்னை மன்னிக்கவும். தமிழ் தானாக வளரும் என்றாலும், நம்மால் வரும்முன் காக்க வேண்டி (ஆங்கிலத்தில் proactive ஆக) ஏதாவது செய்ய முடியுமா என்பதைத்தான் இக்கட்டுரை ஆய்கிறது. இனி கட்டுரைக்கு செல்வோம்.

முன்னுரை

தமிழ் நாட்டில் தமிழ் கொல்லப்பட்டு வருகிறது. வியாபாரம் என்ற
பெயரில் தமிழின் கழுத்து அறுக்கப் பட்டு வருகிறது. அதிகாரம்
உடையவர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்துவரும் தெரிந்தும் தம்
கண் முன்னே தமிழ் அழிவதைக் கண்டும் ஏதோ காரணங்களைச்
சொல்லிக் கொண்டு வாய்மூடிக் கிடக்கின்றனர். தமிழ் நசுங்கி
வரும் காரணத்தையும் தமிழைக் காக்க யாது செய்ய வேண்டும்
என்பதையும் இக்கட்டுரை ஆய்கிறது.

அவமானச் சின்னம்

விளம்பரப் பலகைகள் எல்லாம் ஆங்கிலத்தில்.
தமிழ்நாட்டில் தமிழ் பள்ளிகளில் தமிழ் பேசினால் அபராதம்.
தமிழ்நாட்டில் தமிழ் பேசினால் கேவலமாக பார்க்கப்படுகிறது.
ஆங்கிலம் பேசினால் கௌரவமாகவும் பெருமையாகவும் பார்க்கப்படுகிறது.
வியாபார நோக்கில் ஆங்கிலம் புகுந்து தலைவிரித்தாடுகிறது.
தொலைக்காட்சி வானொலி செய்தித்தாள் போன்ற அனைத்து
ஊடகங்களிலும் செய்திபரிமாற்றத்திலும் தமிழ் நசுக்கப்படுகிறது.
தமிழனே தமிழை இழிவாகப் பேசும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
பற்றோடு வளர வேண்டிய இளைய தலைமுறை விதைகளில் ஆங்கில
நஞ்சு ஆழமாக ஊடுருவி வேரூன்றிக்கொண்டிருக்கிறது..

காரணம்

இதற்க்கெல்லாம் நாமே காரணம். நாம் அரியணையில் அமர்ந்து அதிகாரம்
செலுத்திய காலத்திற்க்கும் இன்றைய காலத்திற்க்கும் இடைப்பட்ட
அடிமைக் காலத்தில் நாம் நம் மொழியையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்கத்
தவறிவிட்டோம். அறிவியலும் தொழில்நுட்பமும் படையெடுத்து வந்த பின்
நாம் நம் மொழியை ஒழுங்குமுறைப் படுத்துவதில் தவறிவிட்டோம்.
புதுப் பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கையினாலும் உலகமயமாக்கலின்
தாக்கத்தினாலும் கடந்த முப்பது ஆண்டுகளில் நம் மொழி மற்றும்
கலாச்சாரத்திற்க்கு புது வித வன்முறைத்தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.

கால மாற்றங்களுக்கு ஈடு கொடுத்து அந்தந்த மொழிகளைப் பாதுகாப்பது
அந்தந்த நாட்டில் உள்ள மன்றங்களின் இன்றியமையாத கடமையாகும்.

தமிழ் நாட்டினர் அக் கடமையிலிருந்து தவறிக் கொண்டிருக்கின்றனர்.
அரசியல் ஆதரவும் அரசியல் வலிமையின் துணையும் இல்லாது
எந்த ஒரு காரியத்தையும் சாதிக்க இயலாது. பாரதிதாசன் அன்று நம்
நிலையை வலியுறுத்தியும் விழிப்புணர்வுக் குரல் எழுப்பியும்
நாம் முழுவதுமாக முழுமூச்சில் செயல்பட தவறிவிட்டோம்.

நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும். இனிமேல் நடக்கப் போவதை
நல்லவைகளாக்க என்ன செய்வதென்று சிந்தித்து அதற்க்கு வேண்டியதை
செய்து செயல்படுவோம்.

உடனே செயல்பட வேண்டுவன

தமிழ் மறுமலர்ச்சி அடைய ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டுமென்று
பாவேந்தர் பாரதிதாசனார் தனது தமிழியக்கம் என்ற ஆக்கத்தில் தெளிவாக
விரிவாக கூறியிருக்கிறார்.

தமிழ் நாட்டில் தமிழ் மறுமலர்ச்சி அடைய என்ன செய்ய வேண்டும் என்று
சிந்தித்து கீழே 10 அம்ச திட்டத்தைக் கொடுத்திருக்கிறேன். இது முதல் வடிவம்
மட்டுமே. பல தமிழ் ஆராய்ச்சியாளர்களும் தமிழக அரசும் இணைந்து
செயல்பட்டு விவாதித்து திட்டங்களை நனவாக்கிட வேண்டும்.

கல்வெட்டில் எழுதிக் கொள்ளுங்கள் – கீழே உள்ள திட்டங்களை நாம்
முற்றிலும் அமுல் படுத்தி விட்டால் தமிழ் கண்டிப்பாக பல நூற்றாண்டுகள்
வலிமையோடு வாழும்.

1. அனைத்து படிப்பு-கல்விக்குப் (எல்லாத் துறைகளும்) பயன்படக்கூடிய அனைத்து புத்தகங்களையும் உடனடியாக தமிழாக்கம் செய்திடல் வேண்டும்.புது புத்தகங்கள் வர வர தமிழாக்கம் தொடர்ந்து செய்திடல் வேண்டும். தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து துறையினரும் குழுக்கள் அமைத்து இதில் ஈடுபட வேண்டும்.
2. அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் 50 சதவிகிதம் முழுதும் தமிழில் கற்பித்தல் வேண்டும். எந்தக் கல்லூரி பள்ளியாயினும் சரி. வேற்று மொழி வழியாக கல்வி பயில்வோரிடம் நல்ல அளவில் பணம் திரட்டி தமிழ் மன்ற தமிழ் வளர்ச்சிக்கு பயன்படுத்துதல் வேண்டும். [எத்தனை சதவிகிதம் என்பதை விவாதத்திற்க்கு வைக்கிறேன். ஆனால் அது தமிழுக்கு தீங்கு விளைவிக்காதபடி இருத்தல் வேண்டும்.]
3. தமிழ்நாட்டில் எந்த வேலை சேர்வதற்க்கும் தமிழில் கற்றிருக்க வேண்டும் என்பது சட்டமாக இருக்க வேண்டும். பள்ளியிலும் கல்லூரியிலும் தமிழ் வழிக் கற்போருக்கு வேலை கிடைத்திட இது பயனுள்ளதாக இருக்கும். (இப்படித்தான் அயல்நாட்டினர் தங்களுடைய மொழியைப் பாதுகாக்கின்றர். இன்றும் சீனமோ ருஷ்யாவோ ஜப்பானிய மொழியோ கற்று மற்றதைக் கற்கும் இந்திய மாணவர்கள் பலர் உள்ளனர். ஏன் இங்கிலாந்தில் கூட ஆங்கிலம் கற்றிருந்தால் தான் வெளிநாட்டவர் வேலைக்கே சேர முடியும். இது சர்வாதிகாரமல்ல.)
4. தமிழ்நாட்டில் எந்த ஒரு பொருளை விற்க அனுமதித்தாலும் அதற்க்கு தமிழ் பயனீட்டு முறை அல்லது தமிழ் இடைமுகம் (Tamil User Interface) இருந்தால் மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். இது இல்லாத ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் அனைத்து பொருட்களும் அடுத்த ஆறு மாத காலத்திற்க்குள் இந்த வசதியைக் கொடுத்தல் கட்டாயம்.
5. நவீன உலகத் தமிழ் சங்கம் தமிழ் நாட்டில் அமைந்திடல் வேண்டும். அதன் தலையாய கடமையே தமிழைப் பாது காப்பதும் வளப்பதுமாக இருத்தல் வேண்டும்.
6. நவீன உலகத் தமிழ் சங்கத்திற்க்கு போதிய அதிகாரமும் உரிமையும் வழங்கிடல் வேண்டும். எந்த அரசு வந்தாலும் அதை ஆதரிக்கும் வகை செய்தல் வேண்டும். அம்மன்றம் ஆண்டுக்கு நான்கு முறை கூடி தம் கடமைகள் சரியாக நடக்கின்றனவா என்று ஆராய்ந்து பார்த்தல் வேண்டும். படிப்படியான திட்டங்களையும் அவற்றை அமுலாக்கும் திட்டத்தையும் மேற்பார்வை பார்த்திடல் வேண்டும்.
7. தமிழ்த்திருநாள் ஆண்டிற்கொருமுறை கொண்டாடுதல் வேண்டும். இன்றிருப்பது போல் அல்லாது தமிழ்க் கலைநிகழ்ச்சிகளுடனும் (கரகாட்டம் லெஸ்ஸிம் ஆடுபுலியாட்டம் கபடி சிலம்பாட்டம் போன்று...) போட்டிகளுடனும் சிறப்பாகக் கொண்டாடுதல் வேண்டும்.
8. தொலைக்காட்சி செய்தித்தாள் வானொலி ஊடகங்கள் (Media) போன்றவைகளில் தமிழ்-ஆங்கில பயன்பாட்டை ஒழுங்கு முறை செய்திடல் வேண்டும். மீறுபவர்களுக்கு வலிய தண்டனை மொழிதல் வேண்டும். – இதில் என்னன்ன செய்யலாம் செய்யக்கூடாது என்பதை தெளிவாக விரிவாக உரைத்தல் வேண்டும். விளம்பரப் பலகைகள் முற்றிலுமாக தமிழைத் தாங்கியே இருத்தல் வேண்டும். வியாபார தேவையுள்ள இடங்களிலும், சுற்றுலாத் தலங்களிலும் மற்ற பிற இன்றியமையாத இடங்களிலும் 5க்கு 1 என்ற அளவு விகிதத்தில் தமிழ்-ஆங்கில பதிப்போடு இருத்தல் வேண்டும்.
9. அரசு அலுவலகம் மற்றும் பிற அலுவலகங்களிலும் தகவல் பரிமாற்றம் தமிழிலேயே நடைபெற வேண்டும்.
10. மேற்கூறிய ஒன்பது முறைகளில் எந்த மாற்றம் கொண்டு வந்தாலும் அது தமிழுக்கு வளத்தைக் கொடுப்பதாக அமைந்திருந்தால் மட்டுமே ஏற்கப்பட வேண்டும். இத்திட்டங்களை எதிர்ப்பவர்களும் மீறுபவர்களும் இந்தியக் குடியுரிமை ரத்து செய்திட வேண்டும்.


எதிர்ப்பு

இத்திட்டங்களுக்கு இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகளும்
அவர்களின் கூலியாட்களும் வியாபாரிகள் மற்றும் வியாபார நோக்கில்
பள்ளி கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்களும் உடனடியாக கடும் எதிர்ப்பு
தெரிவிப்பர். வேடிக்கை என்னவென்றால் தமிழைக் காக்க வேண்டிய
இவர்களே நம் எதிரிக்காக வாதாடுவார்கள். தமிழுக்கு மகனாக இருந்து
கொண்டு தமிழ்நாட்டில் காற்றை சுவாசித்துக் கொண்டு தமிழுக்கே எதிராக
பேசுவார்கள். பந்த் அறிவிப்பார்கள்.

ஆனால் ஊசி குத்துவது வலிக்கத்தான் செய்யும். ஆனால் அது நம்மை
நோயிலிருந்து பாதுகாக்கவே என்பதையும் காலப் போக்கில் அது மிக்க
நன்மை தரும் என்பதையும் அவர்கட்கு உணர்த்துவது தமிழ் சங்கத்தின்
கடமையும் அதற்க்கு ஆதரவு தருவது தமிழக அரசின் கடமையும் ஆகும்.

இந்த வேளை தான் தமிழ் சரித்திரத்தில் மிக முக்கியமான நேரமாகும்.
தமிழின் வலிமையினைச் சோதனை செய்து உலகிற்க்குப் பறைசாற்றும்
காலமுமாகும். தமிழ்நாட்டில் ஆங்கிலத்திற்க்கு எதிரான போரில்
ஆங்கிலத்தை தூள்தூளாய் பொசுக்கிட தமிழர்களாகிய நாம் அனைவரும்
ஒரே காலில் நிற்கும் தருணமிது. இத்திட்டத்தை இன்று செயல்படுத்தாவிட்டால் இனி என்றுமே செயல்படுத்த முடியாது.

இத்திட்டங்களை இரவோடு இரவாக செயல்படுத்துவது சாத்தியமாகுமா
என்பது கேள்விக்குறியே. ஆனால் மெதுமெதுவாக செயல்படுத்துவது
இன்றியமையாதது.

இத்திட்டங்களைச் செயல்படுத்தாவிடில் ஆங்கிலம் தமிழ்நாட்டை
அடிமையாக்கும். இன்று இந்த பொழுது தமிழ் பல இடங்களில் செத்து விட்டது. உதாரணமாக எல்லா விளம்பரப் பலகைகளில் பற்பல கல்லூரி பள்ளிகளில் கைப் பேசிகளில் வளர்ந்து வரும் இளைய தலைமுறைகளின் வாயினில்... என்று பல இடங்களில் தமிழை ஏற்கனவே அடக்கம் செய்தாகிவிட்டது. இந்நிலை நீட்டித்தால் தமிழ் பழக்கம் சிறிது சிறிதாகக் குறைந்து இன்னும்
ஐம்பதே ஆண்டுகளில் தமிழ் மரணிக்கும். தமிழுக்கு சமாதிக்குக் கூட இடமிருக்காது. இது உறுதி. அவ்வாறு ஒரு நிலை வருவதற்க்குப் பதில் தமிழ்நாட்டைக் கடல் விழுங்கி தமிழர் அனைவரும் இறந்து போவது சாலச் சிறந்தது.

முடிவுரை

விழி. எழு. செயல்படு. செயல்படுத்து. இல்லையேல் சாவு.

ஔவையோ பாரதியோ இருந்தால் இப்படித்தான் கூறுவார்கள்.தமிழுக்கு மகனாயிரு. ஆங்கிலத்துக்கு மகனாயிருந்து தமிழைக் கொல்வதைவிட சாவது மேல்.

இந்த கட்டுரை பற்றிய கேள்வி-பதில்


தமிழ் மணம் நிறைந்த நீங்கள், இந்த பதிவில் வன்முறை தெரிகிறது என்று நான் குற்றம் சாட்டுகிறேன். இந்த குற்றசாட்டுக்கு உங்கள் மறுமொழி என்ன?.

முதலில் இந்த பெரிய மடலைப் படிக்கும் முன்... நான் யாவரையும் மிக்க மரியாதையுடன் மதிப்பவன். எல்லோரையும் அவர்களின் கொள்கைகளையும் மதிப்பவன். யாரையும் பழிப்பது என் நோக்கமல்ல. மேலே படியுங்கள்...... உங்களைப்பற்றி எனக்கு சிறிதளவே தெரியும். இருப்பினும் எனக்கு தெரிந்ததை வைத்து கூறுகிறேன். உங்களையும் என்னையும் மட்டும் எடுத்துக் கொண்டு பார்த்தோமேயானால் நீங்கள் உங்கள் வாழ்வில் கடந்து வந்த பாதையும் நான் என் வாழ்வில் கடந்து வந்த பாதையும் வேறுவேறாக இருக்கும். என் 22 வயது வரை கோபமே வந்தது கிடையாது. அப்போது உலகமும் எனக்கு தெரியாது. சில வருடங்களுக்கு முன்னர் உலகம் தெரிந்த பின்னர் மிகவும் ஆழமாக சிந்தித்தேன். இவ்வாறு செய்யக்கூடாது, இருப்பினும் என் சிந்தனை இப்படி ஓடியது::: ஒரு நேர்மையான ஓர் அரங்கில் தமிழ் மொழி சிறந்ததா இல்லை ஆங்கிலம் சிறந்ததா என்று போட்டி வைத்துப் பார்த்தால் சந்த நயத்திலிருந்து, சொல் நயம் வரை ஆங்கிலம் தமிழுக்குப் பின்னால் வெகு தூரம் இருக்கும் என்பது என் முடிவு. சில ஆங்கில பாடலைக் கேட்டால் வாயில் சிறு கற்களைப் போட்டுக் கொண்டு உரைநடை பேசுவது போல் இருக்கும். ஆனால், இத்தனை நல்ல சுவையும் தகுதிகளும் தமிழுக்கு இருந்தும் தமிழ் ஏன் உலகை ஆளவில்லை (இங்கு ஆளவில்லை என்ற சொல் சற்று கடுமையானது. பரவுவது.. இல்லை பயன்படுத்துவது என்பது சரியாக இருக்கும். இருப்பினும் விவாதத்திற்காக இதை பயன்படுத்துவதற்கு உரிமை கோருகிறேன்) என்ற வினா எழுந்தது. அப்போது தான் புரிந்தது, ஒரு மொழி புகழ் பெற அதன் சுவை மட்டும் போதாது. அதை உபயோக்கிக்கும் மக்கள் வலிமையுடன் இருக்க வேண்டும் என்று. ஆங்கிலத்தில் கூற வேண்டுமானால்...The Success behind English is not the language itself, but the PEOPLE behind it.வெள்ளைக்காரர்கள் வலுக்கட்டாயமாக அவர்களின் மொழியை சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் பல நாடுகளில் புகுத்தினார்கள். சில நூறாண்டுகளுக்கு முன்னர் அவர்கள் செய்த ரவுடித்தனத்தின் பலனை இன்று அவர்கள் அனுபவி்க்கிறார்கள் (உதாரணம்- ஆங்கிலக் குழந்தைகள் இன்று தொழில்நுட்பம் கற்றுக் கொள்ள அவர்கள் தாய் மொழி தவிர வேறு மொழி கற்க வேண்டியதில்லை). மேலும் இன்று அவர்களிடம் நிறைய பணம் இருப்பதால் அதை தொழில் நுட்ப வளர்ச்சிக்கு பயன்படுத்துகிறார்கள். அதிலும் முன்னேறுகிறார்கள். தமிழ் எப்படி உலகை ஆள முடியும் ???என்னிடம் பல கோடி அமெரிக்க வெள்ளி கொடுத்து அதை செலவு செய்ய சொன்னால், முதலில் அந்த பணத்தை தற்போதுள்ள தொழில்நுட்பத்தையெல்லாம் தமிழுக்கு மாற்ற உத்தரவிடுவேன். பின்னர், அனைத்து துறைகளிலும் தமிழில் ஆராய்ச்சி செய்யுமாறு வல்லுநர்களை ஏவிவிடுவேன். சில ஆண்டுகளில் தொழில்நுட்பம் தமிழில் வளர்ந்த பிறகு தமிழ் கற்றவருக்கு மட்டுமே அதை பயன்படுத்த அனுமதி கொடுப்பேன். இப்போது... யாவரும் முதலில் தமிழ் கற்றால் தான் தொழில்நுட்பம் பெற முடியும் என்ற நிலை வந்தால் தான் தமிழ் கற்பர். இப்படித்தான் தமிழால் உலகை ஆள முடியும்.அறிவுரை-இது பயங்கர வன்முறை என்று நீங்கள் கூறுவது எனக்கு கேட்கிறது. ஆனால் ஒன்றை உற்று நோக்க வேண்டும். எந்த மொழியானாலும் சம்மதம். எந்த மதமானாலும் எனக்கு சம்மதம் என்று கூறுபவர்கள் இந்தியர்களைப் பார்த்து மட்டும் தான் the so-called அறிவுரை கூறுவார்கள். இதே அறிவுரையை ஜார்ட் புஷ்ஷுக்கும், பின் லாடனுக்கும் இல்லை வேறு எந்த நாடானாலும் சரி, அங்கு சென்று அறிவுரை கூறுவார்களா.. மொழி என்றால் அது பிற மொழிக்கும் இடம் தர வேண்டும். கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. இதே அறிவுரையை ஜார்ஜ் புஷ்ஷோ இல்லை ஐ.நா.வோ ஏற்றுக் கொண்டு உலகில் உள்ள எல்லா பள்ளிக்கூடங்களிலும் தமிழை கற்றுக் கொடுப்பார்களா ??? இது சாத்தியமா.. சரி தமிழை ஏன் கற்றுக் கொடுக்க வேண்டும்.. வேறு எந்த மொழியாயினும் 3 மொழியை கற்க வேண்டும் என்று உலகில் எல்லா பள்ளிக்கூடத்திலும் ஆணையிடுவார்களா... நமக்கு அறிவுரை கூறுபவர்கள் இதை முயன்று பார்க்கட்டும்.எல்லா மதத்திற்கும் இடம் கொடுக்க வேண்டும் என்ற கொள்கையை ஏற்றுக் கொண்டு அவர்கள் தங்கள் நாட்டில் இருக்கும் சர்ச்சுகளையும் மசூதிகளையும் பராமரிக்க செலவிடும் பணத்தில், இனி சிறு தொகையை இந்து மற்றும் புத்த கோவில்கள் கட்டி பராமரிப்பதற்கும் இசைவார்களா ??? சமமாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறுபவர்கள் எல்லாம் ஏன் நம்மைப் பார்த்து மட்டும் கூற வேண்டும் ??? இவர்கள் வேறு யாரிடமும் இதே அறிவுரையைக் கூற மாட்டார்கள்.தீவிரமாக இருப்பது என்பது இயல்பாக நம்முடைய ரத்தத்தில் இல்லாத பண்பு. நாம் என்ன சொன்னாலும் வெகுவாக ஆராயாமல் ஏற்றுக் கொள்வோம். நம்முடைய இந்த பண்பே மிக சிறந்த பண்புதான். ஐடியலான உலகில் இது மிகவும் போற்றத்தக்கது. ஆனால் இந்த உலகம் அப்படிப்பட்டதல்ல. உலகில் இருக்கும் யாவரும் கையில் கத்தியுடனும் ஆயுதத்துடனும் இருக்கும் போது நாம் மட்டும் ஏதும் இல்லாமல் நான் நல்ல பிள்ளை என்று இருந்தால் நம்மை ஒருவன் குத்தி கொன்று விட்டுத்தான் போவான். 17 முறை தோற்ற கோரி முகமதுவை ( பெயர் சரியா தெரியவில்லை) பாவம் பிழைத்துப்போ என்று உயிர் பிச்சை கொடுத்தவர் காஷ்மீர் ராஜா. 18 வது முறை அவன் ஜெயித்த பின்னே முதலில் அவன் செய்தது அந்த காஷ்மீர் ராஜாவைக் கொடூரமாக குத்திக் கொன்றது தான். அந்த அனுபவத்திலிருந்து நாம் இன்னும் பாடம் கற்கவில்லையென்றால்.....அது மட்டுமா. காந்தியடிகளின் அகிம்சைப் போராட்டம் மிகவும் தெய்வீகமானது. ஆனால், அதை மனிதர்களுக்கு எதிராகத்தான் பயன்படுத்தனுமே தவிர ஆங்கிலேய மிருகங்களுக்கு எதிராக அல்ல.. உதாரணத்துக்கு ஜாலியன் வாலாபாக் படுகொலையின் போது காந்தியடிகளும் அந்த கூட்டத்தில் இருந்திருந்தால் அவர் அப்போவே வன்முறை தீவிரவாதத்துக்கு பலியாகியிருப்பார். ஏதோ அவர் செய்த புண்ணியம்... சுதந்திர காற்றை சுவாசித்து விட்டு அதே வன்முறைக்கு கோட்சேவால் பலியானார். சிங்கள ராணுவம் செய்யும் அட்டூழியங்களைப் பார்த்தும் சாந்தமாக அமைதியாக இருந்தால் நமக்கு வேறு பெயர். இல்லை காந்தியடிகளின் அகிம்சையை கடைப்பிடித்திருந்தால் இன்று என்னவாகியிருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. சமாதானம் கூறும் பிறர் எல்லாம் அடுத்தவனுக்கு சோறு ஆக்கிப் போடுபவர்கள் போல். சோற்றில் விசம் இருக்கிறதா இல்லை பல்லி இருக்கிறா என்பது பற்றிய கவலை அவர்களுக்கிருக்காது.இதற்காக நான் வன்முறையில் ஈடுபடுங்கள் என்று கூறவில்லை. வம்பு சண்டைக்கு போகாதீர்கள். ஆனால் அதே சமயம் வந்த சண்டையை விடாதீர்கள் என்ற கோட்பாடு நன்று என்றுதான். கூறுகிறேன். மேலும், ஆங்கிலத்துக்கு சொந்தக்காரர்களான வெள்ளைக்காரர்கள் பொதுவாக நற்குணம் படைத்தவர்கள் அல்ல. அவர்களின் குணங்கள் பல மிருகங்களின் குணங்களுக்கு ஒப்பாகும். இதில் இன்னும் நான் சுட்டிக்காட்டி கூற விரும்பவில்லை. அவர்களின் ஆங்கிலம் பரவி புகழ் பெற்ற அளவிற்கு அவர்களுக்குத் தகுதியும் கிடையாது. இன்று நான் இங்கிலாந்தில் ஏதோ ஒரு ஊரில் தெருவில் நடந்து போனால் என் மேல் கல் எறிகிறார்கள். இன்னொரு ஊரில் குடித்து முடித்த பீர் பாட்டிலை என் மேல் எறிகிறார்கள். இன்னொரு ஊரில் என்னை கைபிடித்து இழுத்து வம்பு சண்டைக்கு இழுக்கிறார்கள். கேட்கவே கூசும் தகாத வார்தைகளைக் கூறி திட்டுகிறார்கள் வீதிகளில். சில ஊர்களில் இரவு 7 மணிக்கு மேல் நடமாடவே முடியவில்லை. கேட்டால் இனவெறியாம். 12 வயதிலிருந்து 23 வயது வரையுள்ள வாலிபர்கள் எல்லாம் கையில் கத்தி இல்லை துப்பாக்கியோடு அலைகிறார்கள். நான் இது நம் நாடு இல்லை என்ற ஒரே காரணத்தினால் பொறுத்தப்போகிறேன். என் உடமைக்கோ உயிருக்கோ ஆபத்து வந்தால் ஒரு கை பார்த்து விடுவேன். இங்கு உள்ள காவல் நிலையத்தில் வேலை பார்ப்பதற்கு ஆட்கள் இல்லை. பல காவல் நிலையங்களை மூடுகிறார்கள். இவர்களெல்லாம் ராணுவத்தினராய் ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் சுரண்டி, பிச்சை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் மேலே கூறியிருக்கும் சம்பவங்கள் எல்லாம் மிகச் சிறியதே. பொறுத்துக் கொள்ளக்கூடியதே. சரி எங்கோ ஆரம்பித்து எங்கோ போய்விட்டேன்... தாய் மொழியில் கல்வி கற்பது என்பது மிக முக்கியமான பிறப்புரிமை. இந்த உரிமையை நாம் தான் நமக்கு கொடுக்க வேண்டும். பின் லாடன் வந்து கொடுக்க மாட்டான். இது புண்பட்ட நெஞ்சு.. அது தான் அவ்வப்போது சிறிது வன்முறை காட்டுவது போல் எழுதிவிடுகிறது...

தமிழை அழிக்கும் ஆங்கில தமிழர்கள் -

தமிழை அழிக்கும் ஆங்கில தமிழர்கள் - சொல்ல சொல்ல கொதிக்குதடா நெஞ்சம்

http://idlyvadai.blogspot.com/2007/12/blog-post_1600.html

மருதாணி வைத்த மாணவர் சஸ்பெண்ட் - கிறித்தவ பள்ளி அட்டகாசம்

http://puduvaisaravanan.blogspot.com/2007/12/blog-post.html

Friday, 23 November 2007

முத்திரை வாசகங்கள் - பஞ்ச் டயலாக்

முத்திரை வாசகங்கள்

சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

வலிமை மிக்க இரும்பு மனிதர் எம் நாட்டுக்கு தலைவராக வேண்டும். அவர் எம் தேசத்தின் துஷ்டர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கி எம் தேசத்தை தலை நிமிர்த்திடல் வேண்டும்.

10 ஆண்டுகளுக்கு முன்னர் நான் 98% ஆங்கிலமும் 2% தமிழும் பயன்படுத்தி வந்தேன். இன்று, 80% தமிழும், 20% ஆங்கிலமும் பயன்படுத்தி வருகிறேன். அந்த 20% என் அலுவலகத்தில் தேவையின் போது மட்டும் தான். வாழ்க தமிழ்.

அளவுக்கு மீறிய ஆங்கிலத்தை அழி. தமிழுக்கு மகனாயிரு. இல்லை செத்தொழி. எதிரிக்கு மகனாயிருந்து தமிழைக் கொல்லாதே.

தமிழில் ஆங்கிலத்தைக் கலக்காதே. முடிந்தால் ஆங்கிலத்தில் தமிழைக் கல.தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசிப்பார். இழித்துக் கொண்டே ஆங்கிலத்தில் பதிலுரைப்பான். ஆங்கிலேயனிடம் தமிழில் பேசிப்பார். எரிந்து கடிந்து முதலில் மொழிமாற்றம் செய்யச் சொல்வான்.

ஆங்கிலம் கத்தியைப் போன்றது. அதை உங்கள் சமையலறை வெங்காயத்தை வெட்ட மட்டும் பயன் படுத்துவீர். வீட்டில் உள்ளவர்களையும் தமிழன்னையையும் கொல்வதற்க்கல்லவே.

சார்.. இதுல மசாலாவே இல்ல.. கொஞ்சம் மசாலா கலந்து சொல்லுங்களேன்....

ஆங்கிலம் பாத்ரூம் செருப்பைப் போன்றது.. அதை வீட்டு அடுக்களையில் நீங்கள் சாப்பிடும் தட்டின் மேல் வைக்காதீர்கள்...

சார்... இன்னும் கொஞ்சம் மசாலா தூக்கல் பண்ணுங்க சார்...

ஆங்கிலம் ஆணுறையைப் போன்றது... பயன்படுத்தியபின் தூக்கியெறிந்து விடவும்.. அதைப்போய் வாயில் போட்டு சூயிங்கம் போல் மெல்ல வேண்டுமா...

சரி சரி.. போதும் சார்.. இதோட நிறுத்திக்கறேன்...

தமிழே உயிர் !!! ஆங்கிலம் வியாபாரத்திற்காக மட்டுமே..

Wednesday, 31 October 2007

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது யார் ?


இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது யார் ?

இந்த கேள்வியை இந்தியாவில் கேட்டால் காந்தியடிகள் என்று தான் எல்லோரும் சொல்வார்கள். அப்படித்தான் நம் பள்ளிக்கூடங்களில் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. காந்தியடிகள் மக்கள் கூட்டத்தை கூட்டி போராடினார் அது உண்மைதான். ஆனால் இவர் போராடினதினால்தான் வெள்ளைக்காரன் சுதந்திரம் கொடுத்துச் சென்றான் என்றால் அது தவறான கருத்தாகும். உண்மையில் இரண்டாம் உலகப் போருக்குப்பின்னர் பிரிட்டன் மிகவும் கடனாளியானது. இங்கிலாந்து அரசாங்கத்தால் இந்தியாவில் அரசாங்கம் நடத்த போதுமான பணம் இல்லாமல் போனது. மேலும். இந்தியாவிலிருந்து கொள்ளையடித்து கொண்டு செல்வதெல்லாம் முடிந்தாகிவிட்டது. இனிமேலும் இந்தியாவில் கொள்ளையடிக்க ஏதுமில்லை. இதனால் இங்கிலாந்து அரசாங்கம் இந்தியாவில் செய்யும் செலவு பணத்திற்கான லாபம் (Return of Investment) கிடைக்காமல் போகும். இதனாலேயே இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்க முன்வந்ததே ஒழிய... காந்தியடிகள் போராடியதால் இல்லை. மேலும், ஐரோப்பியர்கள் அடுத்தவர்களை மதித்ததே கிடையாது. இன்றும் மதிப்பதே கிடையாது. நல்ல காலாச்சாரமும் அவர்களிடம் கிடையாது. அப்படிப் போன்ற மிருகங்களிடம் ஏன் அகிம்சையாக போராட வேண்டும் ? இது மிகப்பெரிய முட்டாள்தனமல்லவா ? எந்த ஆயுதத்தை எங்கு எப்போது யாரிடம் உபயோகிக்க வேண்டும் என்று தெரியவில்லை என்றால் அவர் நல்ல தேச தலைவராக இருக்க முடியுமா ?


மேலும் இந்தியாவுக்கு சொந்தமான நிலத்தை இரு பங்காக பிரிப்பதற்கு எக்காரணம் கொண்டும் சம்மதித்திருக்கவே கூடாது. இந்தியாவை இந்தியா-பாக்கிஸ்தான் என்று பிரித்தது உலகின் மாபெரும் குற்றம். யார் நிலத்தை யார், யாருக்கு பிரித்து கொடுப்பது ? பாக்கிஸ்தான் என்பது முஸ்லீம்கள் ஆக்கிரமித்த இந்தியாவுக்கு சொந்தமான பகுதியே ஆகும். காந்தியும் நேருவும் சேர்ந்து இந்தியாவை கூறு போட்டு விற்று விட்டார்கள். நல்ல வேளை... கோட்சே காந்தியைக் கொன்றான். இல்லையென்றால் இன்று இருக்கும் பீகார், வங்காளம் போன்ற பல மாநிலங்களையும் மேற்கு பாக்கிஸ்தானுக்கு தானமளித்திருப்பார்கள். காந்தியும் நேருவும் பிரிவினையைக் கையாண்ட விதம் இந்திய வரலாற்றில் ஆற்றமுடியாத துயரத்தையும் வடுவையும் ஏற்படுத்திவிட்டது.


சரி, அப்படியே மத வாரியாக பிரிப்பதற்கு ஒப்புக்கொண்டிருந்தாலும் எல்லா முஸ்லீம்களையும் பாக்கிஸ்தானுக்கு அனுப்பியிருக்க வேண்டும். அவ்வாறு சென்ற துஷ்டர்களையும் செல்லவிடாமல் தடுத்திருக்கிறார்கள். அதுவும் செய்யாமல் இதுவும் செய்யாமல் வளர்ந்து வரும் இந்திய தலைமுறைக்கு மாபெரும் துயரத்தை பரிசளித்துவிட்டு சென்றுள்ளார்கள். அன்றைய தினத்தில் கலவரம் வரும் என்ற காரணத்திற்காக இது போன்ற தவறான முடிவுகள் எடுத்தது சரியல்ல. அப்படி அவர்கள் கலவரம் வரும் என்ற காரணத்திற்காக முடிவு எடுத்திருந்தால் இன்று ஏன் இத்தனை கலவரங்கள் நடக்கின்றன ? மாநிலத்துக்கு மாநிலம் அல்-உம்மா, லக்ஸர்-இ-தொய்பா போன்ற சேவை நிறுவனங்கள் ஏன் இயங்குகின்றன. பாக்கிஸ்தான் கிரிக்கெட்டில் ஜெயித்தால் இன்று எத்தனை நகரங்களில் இனிப்பு வழங்கப்படுகிறது. இந்திய தேச துரோகிகள் இந்தியாவுக்குள்ளேயே இருக்கின்றனர். ஹிந்துக்களை இழிச்சவாயன்களாகவே அந்தக்காலத்திலிருந்து காந்தி முதல் இன்றைய கருணாநிதி வரை கையாள்கிறார்கள். முகத்தில மலம் கழித்தால் கூட ஹிந்துக்கள் தாங்கிக் கொள்வார்கள் என்ற ஒரே காரணத்தினால் ஹிந்துக்கள் எப்போதும் எடுப்பார் கைப்பிள்ளையாகவே உள்ளனர். என்று மாறும் இந்த நிலை ?

Tuesday, 30 October 2007

தமிழ் உதவி கையேடு

பொருளடக்கம்


தமிழ் ஒருங்குறி (Unicode) என்றால்
தமிழ் ஒருங்குறியை எந்தெந்த இயக்குதளங்கள் ஆதரிக்கின்றன ?
விண்டோஸ்-XP இல் ஆங்கிலத்தோடு, தமிழையும் சேர்த்து இயக்க முடியுமா ?
விண்டோஸ்-XP யை முழுவதுமாக தமிழுக்கு மாற்ற முடியுமா ?
தமிழ் ஒருங்குறி விசைப்பலகை எப்படி அமைக்கப்பட்டுள்ளது ?
பழைய தமிழ் எழுத்துக்களை ஒருங்குறிக்கு மாற்ற முடியுமா ?
தமிழ் பக்கங்களை எப்படி தேடுவது ?
சில முக்கியமான தமிழ் பக்கங்கள் சொல்லுங்களேன் -
தமிழ் ஆங்கில அகராதிகள் இருக்கிறதா ?
தமிழில் தட்டச்சு செய்வது கடினமா ?தமிழ் ஒருங்குறி (Unicode) என்றால் என்ன
நல்ல வேளை. ஐரோப்பா கண்டம் முழுவதும் ஆங்கிலத்தில் இல்லை. இல்லையென்றால் இன்று இந்தியா முழுவதுமே ஆங்கிலம் என்ற சிவப்பு பெயிண்டை முகத்தில் அடித்து நம் மொழியையும் தோண்டிப் புதைத்திருப்பார்கள் நம் ஆட்கள். ஆங்கிலம் இணையத்தை ஆதிக்கம் செய்த காலம் எப்போதோ மலையேறி விட்டது. இன்னும் உங்களுக்குத் தமிழில் தட்டச்சு செய்ய தெரியவில்லையென்றால் நீங்கள் தொழில்நுட்பத்தில் பின்தங்கியிருக்கிறீர்கள் இல்லையென்றால் ஆங்கில குதிரையிலேயே இனி உங்கள் சந்ததி முழுக்க சவாரி செய்ய முடிவு கட்டி விட்டீர்கள் என்று பொருள். சரி தானே ?? சரி, விசயத்துக்கு வருவோம்.
(யூனிக்கோடு) ஒருங்குறி எந்த ஒரு மொழியிலும், எந்த ஓர் இயங்கு தளத்திலும், எந்த ஒரு நிரலிலும், ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்துவமான எண்ணொன்றை வழங்குகிறது. கீழிருக்கும் சுட்டியில் ஒருங்குறியைப் பற்றிய முழு தகவலையும் காண்க-
http://www.unicode.org/standard/translations/tamil.html
ஆங்கிலத்தில்
http://www.unicode.org/standard/WhatIsUnicode.html
மேலும் ஒருங்குறியைப் பற்றி நான் சொல்வதைவிட மிக அழகாக இந்த பக்கத்திலேயே இருக்கிறது.
http://www.blogger.com/
இன்னொரு அழகான சுட்டி
http://www.suratha.com/tamilunicode.htmlதமிழ் ஒருங்குறியை எந்தெந்த இயக்குதளங்கள் ஆதரிக்கின்றன
க்னூ/லினக்ஸ்
இலவச பி.எஸ்.டி (FreeBSD)
சன் சொலாரிஸ்
யுனிக்ஸ்
மாக் ஓ.எஸ்
மைக்ரோசாப்ட் விண்டோஸ்
http://ta.wikipedia.org/wiki/இயங்கு_தளம்
இனிமேல் ஒருங்குறியையும் தமிழையும் ஆதரிக்காத இயக்குதளங்களும் மென்பொருட்களும் பெரும்பாலும் சந்தையிலிருந்து இறந்து விடும்.


விண்டோஸ்-XP இல் ஆங்கிலத்தோடு, தமிழையும் சேர்த்து இயக்க முடியுமா
1. விண்டோஸ்-XP இல் ஒருங்குறி சார்ந்த லதா என்ற தமிழ் எழுத்துரு முதலிலேயே நிறுவப்பட்டிருக்கும்.
2. Control Panel, in Regional/Languages Options க்கு சென்று அங்கு Indic/Asian Language option ஐ குறியிடுதல் வேண்டும். இதன் பிறகு உங்கள் இயக்குதளம் சில கோப்புகளை நிறுவும். உங்கள கணினியை ஒரு முறை reboot செய்ய வேண்டியது இருக்கலாம்.
3. மீண்டும் Control Panel, in Regional/Languages Options சென்று Details ஐ சொடுக்கி, Add ஐ சொடுக்கி Input Language ல் தமிழைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Key Settings ஐ சொடுக்கி ஆங்கிலத்திற்கும்-தமிழுக்கும் மாற்றும் பட்டன்களைத் தேர்ந்தெடுத்து அமைத்துக் கொள்ளவும்.
4. இனி, UTF-8 encoding ஐ உங்கள் உலாவியில் தேர்ந்தெடு்த்து தமிழ் பக்கங்களைப் பார்வையிடலாம். Wordpad/Word போன்ற எல்லா பயன்பாடுகளிலும் பட்டன்களை இயக்கி தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் எளிதாக மாறிடலாம்.விண்டோஸ்-XP யை முழுவதுமாக தமிழுக்கு மாற்ற முடியுமா
பாசாஇந்தியா தரும் இடைமுகத்தை உங்கள் கணினியில் நிறுவினால், உங்கள் கணினி முழுவதுமே தமிழ் மயம்.
http://www.bhashaindia.com/downloadsV2/Category.aspx?ID=2
மேலும் இந்த வலைதளத்தை உலாவி வாருங்கள்.
http://www.bhashaindia.com/Patrons/PatronsHome.htm?lang=taதமிழ் ஒருங்குறி விசைப்பலகை எப்படி அமைக்கப்பட்டுள்ளது
http://meenakumar.googlepages.com/UnicodeTamilKeyMap-Med.jpg/UnicodeTamilKeyMap-Med-full.jpg

மைக்ரோசாப்ட்டின் தமிழ் விசை பலகையமைப்பு
http://www.microsoft.com/globaldev/keyboards/kbdintam.htm

பழைய தமிழ் எழுத்துக்களை ஒருங்குறிக்கு மாற்ற முடியுமா
இணையத்தில் பல்வேறு மாற்றும் மென்பொருட்கள் உள்ளன. உலாவிப் பாருங்கள். உதாரணத்திற்கு கீழே ஒன்று.
http://www.suratha.com/reader.htm

தமிழ் பக்கங்களை எப்படி தேடுவது
கூகுள் இணைய தளத்திலேயே தமிழில் தட்டச்சு செய்து தேடலாம். மேலும் தமிழ் ஒருங்குறி சார்ந்த இணைய தளங்கள் இன்று எண்ணற்றவை இயங்குகின்றன.


சில முக்கியமான தமிழ் பக்கங்கள் சொல்லுங்களேன் -
மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்
சென்னை நூலகம்
தமிழ் நேசன்
தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
தமிழ் விக்கிப்பீடியா

மைக்கரோசாப்ட் தமிழ் இடைமுக தயாரிப்பு தகவலிறக்க மையம்
http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=0db2e8f9-79c4-4625-a07a-0cc1b341be7c&DisplayLang=ta
உபுண்டு தமிழில் - http://ubuntu.techintamil.org/
தமிழில் MSN http://content.msn.co.in/Tamil/Default
தமிழ் யாகூ http://in.tamil.yahoo.com/
தமிழ் செய்திகள் http://tamil.samachar.com/
ஆர்குட்டை முற்றிலும் தமிழில் மாற்றிட - Orkut: Settings -> Display Lanugauge:
தமிழ் மரபு அறக்கட்டளை - http://bharani.dli.ernet.in/thf/index.html
பிரிட்டிஷ் நூலக தமிழ் தொகுப்பு - http://www.e-mozi.com/bl_thf/bl_thf.html


தமிழ் ஆங்கில அகராதிகள் இருக்கிறதா ?
http://dictionary.sarma.co.in/default.aspx
இணையத்தில் இன்னும் நிறைய உள்ளன.. மேலும் தருகிறேன். காத்திருங்கள்.


தமிழில் தட்டச்சு செய்வது கடினமா
ஹா ஹா.. அல்வா சாப்பிடுவது கடினமா என்பதற்கு சமம் இந்த கேள்வி. ஆம். அல்வா சாப்பிட வேண்டுமானால், அல்வாவைப் பெற்று பிரிக்க வேண்டும். பின்னர் வாயைத் திறக்க வேண்டும். இலையில் இருக்கும் அல்வாவை கையிலோ இல்லை கரண்டியிலோ எடுத்து வாய் வரை சென்று ஊட்டி விட வேண்டும். பின்னர், கஷ்டப்பட்டு அல்வாவை வாயில் சுவைக்க வேண்டும். பின்னர் விழுங்க வேண்டும். சாப்பிட்டு முடித்தபின் கையை கழுவ வேண்டும். கொஞ்சம் சோம்பேறித்தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு முயன்றால் முடியாதது உள்ளதோ ??
சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் விசைப்பழக்கம்.

Monday, 29 October 2007

தமிழுக்கு வீரவணக்கம்

அண்ணா சாலை, சென்னை.
ஒரு நிமிடம் பொறு நண்பா.
சற்றே எத்திக்கும் திரும்பிப்பார்.
எங்கும் ஆங்கிலப் பலகைகள்.
மிக்க நன்றி.
தமிழ் அன்னையை வெற்றிகரமாக புதைத்துவிட்டாய்.

சென்னை - உலகின் தலைநகரமென
நாள்தோறும் மார்தட்டும் எனக்கு வெட்கம்.
அரைக்கால் சட்டை எங்கு வேண்டுமோ
அங்கு மட்டும் மறைக்காது போன்ற
அவமானம்.

பல்லயிரமாண்டு உன்னிடமிருந்து
தப்பிப்பிழைத்தது தமிழ்.
இன்று
உன்னிடம் அதற்கு மரண தண்டனை.

அமெரிக்காவிலும் பிரிட்டனிலும்
ஆங்கிலம் தெரியாதவர் பலப்பலர்.
நாளை
இந்தியாவில் ஆங்கிலம் தெரியாதவர்
சிறுபான்மையினர்! அவருக்கும் பெயருண்டு
கீழ்மக்களென்று.

எந்தப் பள்ளிக்கூடத்திலும்
இனிதமிழே சொல்லிக் கொடுக்காதீர்கள்.
அதுவே நம் தமிழன்னையை கொல்ல
எளிதான வழி.

விழுமின் எழுமின் என்றேன் சிலகாலம்முன்.
பலனில்லை.
எங்கே சென்றுகொண்டிருக்கிறோம் நாம் ?
சுடுகாடு தான் கண்ணில் தெரிகிறது.
ஒவ்வொரு தமிழனும் முன்புதியில் உணர்ந்திடுக.

சுவையில்லா ஆங்கிலத்தின் வலிமையதன் மக்களே.
வலிமை பற்றி தமிழா, உனக்கு பாடம் வேண்டுமா ?
ஆங்கிலத்தில் பேசும் மழழையும் பெரியவரையும்
மதிக்கிறாய். வணங்குகிறாய். பூஜிக்கிறாய்.
இன்றோடு அதை நிறுத்திவிடு.
உன் எண்ணத்தை சீர்படுத்து.

தமிழின் உயிர் அதன் பயன்பாட்டில்.
எல்லா புதிய தொழில்நுட்ப சொல்லுக்கும்
தமிழ் சொல்லை நிறுவிவிடு.
தமிழையே எங்கும் எப்போதும் பயன்படுத்து.

தமிழ் பேசுவோரை வணங்கிவிடு.
வித்தை பலபுரிந்து தமிழுக்கு சமர்ப்பி.
செவ்வாயில் குடியேறு.
ஆங்கு
தமிழ் கற்றவர் மட்டுமே அனுமதி.

தமிழை செம்மைப்படுத்துவோரோடு சேர்.
தமிழ் கற்றுத்தரா பள்ளிகளை
இங்கிலாந்து போகச்சொல்.
மெல்லத் தமிழ் இனிச் சாகும் - என்ற
வேந்தனாரின் மொழியை பொய்யாக்கிடு.

இவ்வுலகம் அழிந்தாலும் எவ்வுலகம் அழிந்தாலும்
தமிழே.. உனக்கு மரணமேயில்லை !

Friday, 26 October 2007

வளருமா தமிழ்வழிக்கல்வி ?

வளருமா தமிழ் வழிக்கல்வி ?


ஆங்கிலேயர்கள் நமக்கு ஆங்கிலத்தையும் நல்ல கல்வியையும் விட்டுப் போயிருக்கிறார்கள் என்று பெருமை கொண்டீர்களானால் மேலே படியுங்கள். உண்மையில் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் ஆங்கிலேயர்கள் நமது அற்புதமான கல்வி முறையை வேரோடு அழித்திருப்பது புலப்படும். மிக முக்கியமாக திரு தரம்பால் என்ற தத்துவ மேதையின் படைப்புக்கள் நம்முடைய ஆங்கிலேயர்களுக்கு முந்தைய கல்வி முறையையும் அவர்களின் ஆட்சியின் போது மாற்றம் அடைந்த கல்வி முறையையும் அறியலாம். திரு தரம்பால் அவர்களின் எழுத்துக்கள் 1800 களில் உள்ள அரசாங்க கோப்புகளில் கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கிறது.


ஆங்கிலேயர்களின் காலத்திற்கு முன்னால் நம் நாட்டில் முக்கிய மூன்று அமைப்புகளின் வாயிலாக கல்வி கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. இவையாவன: பாடசாலைகள், குருகுல கல்வி மற்றும் முஸ்லீம் மதராசாக்கள். இந்திய கல்வி வரலாற்றில் இந்த மூன்று அமைப்புகளும் மிக முக்கிய பங்காற்றியிருக்கின்றன. தற்போது இருக்கும் பள்ளிகளில் கற்றுத் தரும் வெறும் பாடங்களைப் போல் அல்லாது இந்த கல்வி முறைகளில், நல்ல பண்புகள், பற்பல வித்தைகள் என்று நல்ல தரமான மாணவர்களை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்துமே கற்றுக் கொடுக்கப்பட்டன. இந்த பாடசாலைகளில் வேதம், சாஸ்திரம், புராணம், கணிதம், ஜோதிட சாஸ்திரம், அறிவியல் மற்றும் இலக்கியங்கள் பாடங்களாக அமைக்கப்பட்டிருந்தன. மேலும் அப்போது இந்தியாவிலுள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் குறைந்தபட்சம் ஒரு பாடசாலையாவது இருந்தது என்று தாமஸ் முன்ரோ என்ற கவர்னர் குறிப்பிட்டிருக்கிறார். பத்து லட்சம் பாடசாலைகள் இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதைப் போன்ற ஒரு கல்வி அமைப்பு வேறு எந்த நாட்டிலும் அப்போது இருந்திருக்கவில்லை. ஆண்களுக்கு மட்டுமல்லாது பெண்களுக்கும் தரமான கல்வி வழங்கப்பட்டிருக்கிறது என்பது இந்த ஆக்கங்களிலிருந்து அறியப்படுகிறது.


இதே சமயங்களில் இங்கிலாந்தில் மிகக் குறைந்த அளவு பள்ளிகளே இருந்தன. ஏ.இ.டாப்ஸ் என்ற அறிஞரின் கூற்றுப்படி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஏழைகளின் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்பட்டதாம். இங்கிலாந்தில் அப்போது யாவர்க்கும் கல்வி என்ற முறையே இல்லாமலிருந்தது. யாவர்க்கும் கல்வி என்ற முறை இந்த பாடசாலைகளில் தான் முதலில் தோன்றியதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். இந்த அமைப்பைத்தான் இங்கிலாந்திலும் யாவர்க்கும் கல்வி என்ற அமைப்பைக் கொண்டு வந்ததாக அறிஞர்களின் கூற்று.


காந்தியடிகளின் 1931ல் நிகழ்ந்த கூற்றுப்படி நாம் 1800களில் இருந்ததை விட இப்போது கல்வியறிவு மிக குறைவாகவே உள்ளோம். ஆங்கில ஆட்சியாளர்கள் நம் கல்வி முறையை வளப்படுத்தாமல் அதை வேறோடு அழித்திருப்பதாகவே காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார். மெட்ரிக்குலேஷன் கல்வி முறையை ஆங்கிலேய அரசு தான் நம் மண்ணில் விதைத்தது. ஐரோப்பிய இலக்கியங்களும் இங்கு தான் முதன்முதலில் கற்பிக்கப்பட்டதாக வரலாறு. நீதி மன்றங்களிலும் ஆங்கிலத்தில் வாதாட திட்டம் வகுக்கப்பட்டது. ஆங்கிலத்தில் கல்வி பயின்றவர்களுக்கு உயர்பதவிகளைக் கொடுத்தது ஆங்கிலேய அரசு. இதனால் ஆங்கிலத்தில் கற்கும் முறை மிகவும் பிரபலமானது. இவ்வாறு ஆங்கிலம் நம் நாடெங்கும் ஊடுறுவியது.
கடந்த முப்பது ஆண்டுகளில் தான் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் எண்ணிக்கை எப்போதுமில்லாத அளவுக்கு பலமடங்காக உயர்ந்துள்ளது. ஆங்கிலத்தின் மூலம் கற்பதினால் நமக்கு மேலை நாட்டு தொழில்நுட்பங்களும் தொடர்புகளும் கிடைக்கும் என்ற காரணம் தான் இந்த ஆங்கில பாடதிட்டத்தில் கற்பதற்கு ஊக்கமாக செயல்படுகிறது. உயர்கல்விகளில் பெரும்பாலும் ஆங்கிலமே பயன்படுத்தப்படுகிறது. நர்சரி, நடுநிலை, மேல்நிலைக் கல்விகளில் ஆங்கிலம் வழியாக கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் பலமடங்காக உயர்ந்திருக்கிறது.

கல்வி கற்பதின் முதல் நோக்கமே பாடங்களைப் புரிந்து கொள்ளுதல் ஆகும். ஆனால் ஆங்கிலம் வழியாக கற்கும் மாணவர்கள் பெரும்பாலும் சரியாக பாடங்களைப் புரிந்து கொள்வதில்லை, இல்லையெனில் முழுவதுமாக புரிந்து கொள்வதில்லை. உதாரணமாக பாபா ப்ளாக் ஷிப் என்ற பாடலுக்கு எத்தனை பேருக்கு அர்த்தம் தெரியும் ? மேலும், அப்பாடல் யார் யாரிடம் உரையாடுவதாக தெரியும் ? தாய் மொழியில் கல்வி கற்கும் போது எளிதாக புரிந்து கொள்ளும் சக்தி பயன்படுகிறது. அதனால் கற்றதைப் பயன்படுத்துவதிலும் எளிமையும் புதுப்புது எண்ணங்களும் உருவாகும். புரியாத மொழியைக் கற்றுக் கொண்டு அதிலும் பாடங்களையும் கற்றுக் கொண்டு நம் திறமையை வெளிநாடுகளில் விற்கும் போது, கண்டிப்பாக அவரவர் தாய் மொழியில் பாடங்களைக் கற்று அதே சமயத்தில் ஆங்கிலம் போன்ற பிற மொழிகளையும் அறிந்தால் நம் திறமையும் ஆற்றலும் மொத்தமும் வெளிப்படும் என்பதில் ஐயமில்லை.


ஆனால், தொழிற்கல்வி போன்ற உயர்கல்வியை இன்று தமிழில் கற்க முடியுமா ? கிட்டத்திட்ட சாத்தியமேயில்லை எனலாம். ஏனெனில், பாடங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில். அந்த பாடதிட்டங்களை தமிழில் மாற்றுவதற்கு செலவாகும் நேரமும் பணமும் சற்றே திகைக்க வைத்தாலும் இது கண்டிப்பாக சாத்தியமே. எவ்வாறு ஆங்கிலமே இல்லாத நாட்டில் ஆங்கிலம் வேரூன்றியதோ, காலப்போக்கில் இதுவும் செய்து முடிக்கக் கூடிய ஒன்றே. மருத்தவப் படிப்பை தமிழில் பெறுவதற்கு எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் மேற்கொண்டிருக்கும் முயற்சி முற்றிலும் வரவேற்கக்கூடியதே. ஆனால், இது நடைமுறையில் வருவதற்கு இன்னும் 10 ஆண்டுகளாவது பொறுத்திருக்க வேண்டும். இதே போல் ஒவ்வொரு தொழில்நுட்பத்திலும் தமிழ்வழிக்கல்வியும் இருந்தால் நம் திறமையின் அளவு விண்ணைத் தொடும் என்பதில் ஐயமில்லை.


இதே போன்ற பிரச்சனைகளைத்தான் ஆங்கிலம் அல்லாத நாடுகள் யாவும் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, பிரான்சில் பிரஞ்சு மொழி வழியேதான் அனைத்து பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. புதியதாக எது வந்தாலும் முதலில் தங்கள் மொழிக்கு மொழி மாற்றம் செய்து விடுவார்கள். ஆனால் ஆங்கிலம் கற்க விருப்பமிருப்பவர்களுக்கு, ஆங்கிலம் வெறும் ஒரு பாடமாகவே கற்பிக்கப்படுகிறது. இதனால் இவர்களின் சிந்திக்கும் திறன் தங்கள் சொந்த மொழியில் அமையும் போது பலமடங்காக வெளிப்படுகிறது. இம்முறை அவர்களின் மொழியைக் காக்கவும் வளர்க்கவும் உதவுகிறது. இந்தியாவிலும் இத்தகைய அமைப்பைக் கொண்டால், நம் திறமை பன்மடங்காகப் பெருகும் என்பதில் ஐயமில்லை.

இத்தலைப்பில் மேலும் தகவல் அறிய
http://tamil.sify.com/vaarasurabi/june4/fullstory.php?id=13495323
திரு தரம்பால் அவர்களைப் பற்றியும் அவர்கள் படைப்பைப்பற்றியும் அறிய (ஆங்கில பக்கங்கள்)
http://www.samanvaya.com/dharampal
http://en.wikipedia.org/wiki/Dharampal

தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி !