Monday, 10 December 2007

தமிழ் மறுமலர்ச்சி கொள்கை - இன்று தேவை

தமிழ் மறுமலர்ச்சி கொள்கை
தமிழ் வளர்க.. தமிழ் வாழ்க.. தமிழே நீ நீடூழி வாழ்க..

தமிழ் மறுமலர்ச்சிக் கொள்கை

(இக்கட்டுரை 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எழுதப்பட்டது)

இக்கட்டுரைக்கு முன் என்னைப்பற்றி ஒரு சிறு குறிப்பு-நான் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவனும் இல்லை. நான் பிறந்த நாளிலிருந்து இன்று வரை கிட்டதிட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மொழி எத்தகைய மாற்றத்தைக் கண்டுள்ளது என்பதை கண்கூடாக கண்ட உண்மைகளை மட்டுமே இங்கு கொடுக்கிறேன். மேலும் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் தமிழைக் காக்க யாது செய்ய வேண்டும் என்பதை மட்டுமே இக்கட்டுரை ஆய்கிறது. தமிழ் மக்கள் பிறரையும் அவர்களின் மொழியினையும் மதித்து நடத்தல் மிக அவசியம். உதாரணமாக.. பெங்களூரூவில் கன்னடர்களையும் கன்னடத்தையும் மதித்து போற்றி உரிய மரியாதை செலுத்துவது தமிழர்களின் கடமை. என் வார்த்தைகள் இங்கு சற்று கடுமையாகவே இருக்கும். ஆனால் உண்மை, அதை விடக் கடுமையாக இருக்கிறது. எனவே, என் கடுமையான வார்த்தைகளுக்கு என்னை மன்னிக்கவும். தமிழ் தானாக வளரும் என்றாலும், நம்மால் வரும்முன் காக்க வேண்டி (ஆங்கிலத்தில் proactive ஆக) ஏதாவது செய்ய முடியுமா என்பதைத்தான் இக்கட்டுரை ஆய்கிறது. இனி கட்டுரைக்கு செல்வோம்.

முன்னுரை

தமிழ் நாட்டில் தமிழ் கொல்லப்பட்டு வருகிறது. வியாபாரம் என்ற
பெயரில் தமிழின் கழுத்து அறுக்கப் பட்டு வருகிறது. அதிகாரம்
உடையவர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்துவரும் தெரிந்தும் தம்
கண் முன்னே தமிழ் அழிவதைக் கண்டும் ஏதோ காரணங்களைச்
சொல்லிக் கொண்டு வாய்மூடிக் கிடக்கின்றனர். தமிழ் நசுங்கி
வரும் காரணத்தையும் தமிழைக் காக்க யாது செய்ய வேண்டும்
என்பதையும் இக்கட்டுரை ஆய்கிறது.

அவமானச் சின்னம்

விளம்பரப் பலகைகள் எல்லாம் ஆங்கிலத்தில்.
தமிழ்நாட்டில் தமிழ் பள்ளிகளில் தமிழ் பேசினால் அபராதம்.
தமிழ்நாட்டில் தமிழ் பேசினால் கேவலமாக பார்க்கப்படுகிறது.
ஆங்கிலம் பேசினால் கௌரவமாகவும் பெருமையாகவும் பார்க்கப்படுகிறது.
வியாபார நோக்கில் ஆங்கிலம் புகுந்து தலைவிரித்தாடுகிறது.
தொலைக்காட்சி வானொலி செய்தித்தாள் போன்ற அனைத்து
ஊடகங்களிலும் செய்திபரிமாற்றத்திலும் தமிழ் நசுக்கப்படுகிறது.
தமிழனே தமிழை இழிவாகப் பேசும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
பற்றோடு வளர வேண்டிய இளைய தலைமுறை விதைகளில் ஆங்கில
நஞ்சு ஆழமாக ஊடுருவி வேரூன்றிக்கொண்டிருக்கிறது..

காரணம்

இதற்க்கெல்லாம் நாமே காரணம். நாம் அரியணையில் அமர்ந்து அதிகாரம்
செலுத்திய காலத்திற்க்கும் இன்றைய காலத்திற்க்கும் இடைப்பட்ட
அடிமைக் காலத்தில் நாம் நம் மொழியையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்கத்
தவறிவிட்டோம். அறிவியலும் தொழில்நுட்பமும் படையெடுத்து வந்த பின்
நாம் நம் மொழியை ஒழுங்குமுறைப் படுத்துவதில் தவறிவிட்டோம்.
புதுப் பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கையினாலும் உலகமயமாக்கலின்
தாக்கத்தினாலும் கடந்த முப்பது ஆண்டுகளில் நம் மொழி மற்றும்
கலாச்சாரத்திற்க்கு புது வித வன்முறைத்தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.

கால மாற்றங்களுக்கு ஈடு கொடுத்து அந்தந்த மொழிகளைப் பாதுகாப்பது
அந்தந்த நாட்டில் உள்ள மன்றங்களின் இன்றியமையாத கடமையாகும்.

தமிழ் நாட்டினர் அக் கடமையிலிருந்து தவறிக் கொண்டிருக்கின்றனர்.
அரசியல் ஆதரவும் அரசியல் வலிமையின் துணையும் இல்லாது
எந்த ஒரு காரியத்தையும் சாதிக்க இயலாது. பாரதிதாசன் அன்று நம்
நிலையை வலியுறுத்தியும் விழிப்புணர்வுக் குரல் எழுப்பியும்
நாம் முழுவதுமாக முழுமூச்சில் செயல்பட தவறிவிட்டோம்.

நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும். இனிமேல் நடக்கப் போவதை
நல்லவைகளாக்க என்ன செய்வதென்று சிந்தித்து அதற்க்கு வேண்டியதை
செய்து செயல்படுவோம்.

உடனே செயல்பட வேண்டுவன

தமிழ் மறுமலர்ச்சி அடைய ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டுமென்று
பாவேந்தர் பாரதிதாசனார் தனது தமிழியக்கம் என்ற ஆக்கத்தில் தெளிவாக
விரிவாக கூறியிருக்கிறார்.

தமிழ் நாட்டில் தமிழ் மறுமலர்ச்சி அடைய என்ன செய்ய வேண்டும் என்று
சிந்தித்து கீழே 10 அம்ச திட்டத்தைக் கொடுத்திருக்கிறேன். இது முதல் வடிவம்
மட்டுமே. பல தமிழ் ஆராய்ச்சியாளர்களும் தமிழக அரசும் இணைந்து
செயல்பட்டு விவாதித்து திட்டங்களை நனவாக்கிட வேண்டும்.

கல்வெட்டில் எழுதிக் கொள்ளுங்கள் – கீழே உள்ள திட்டங்களை நாம்
முற்றிலும் அமுல் படுத்தி விட்டால் தமிழ் கண்டிப்பாக பல நூற்றாண்டுகள்
வலிமையோடு வாழும்.

1. அனைத்து படிப்பு-கல்விக்குப் (எல்லாத் துறைகளும்) பயன்படக்கூடிய அனைத்து புத்தகங்களையும் உடனடியாக தமிழாக்கம் செய்திடல் வேண்டும்.புது புத்தகங்கள் வர வர தமிழாக்கம் தொடர்ந்து செய்திடல் வேண்டும். தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து துறையினரும் குழுக்கள் அமைத்து இதில் ஈடுபட வேண்டும்.
2. அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் 50 சதவிகிதம் முழுதும் தமிழில் கற்பித்தல் வேண்டும். எந்தக் கல்லூரி பள்ளியாயினும் சரி. வேற்று மொழி வழியாக கல்வி பயில்வோரிடம் நல்ல அளவில் பணம் திரட்டி தமிழ் மன்ற தமிழ் வளர்ச்சிக்கு பயன்படுத்துதல் வேண்டும். [எத்தனை சதவிகிதம் என்பதை விவாதத்திற்க்கு வைக்கிறேன். ஆனால் அது தமிழுக்கு தீங்கு விளைவிக்காதபடி இருத்தல் வேண்டும்.]
3. தமிழ்நாட்டில் எந்த வேலை சேர்வதற்க்கும் தமிழில் கற்றிருக்க வேண்டும் என்பது சட்டமாக இருக்க வேண்டும். பள்ளியிலும் கல்லூரியிலும் தமிழ் வழிக் கற்போருக்கு வேலை கிடைத்திட இது பயனுள்ளதாக இருக்கும். (இப்படித்தான் அயல்நாட்டினர் தங்களுடைய மொழியைப் பாதுகாக்கின்றர். இன்றும் சீனமோ ருஷ்யாவோ ஜப்பானிய மொழியோ கற்று மற்றதைக் கற்கும் இந்திய மாணவர்கள் பலர் உள்ளனர். ஏன் இங்கிலாந்தில் கூட ஆங்கிலம் கற்றிருந்தால் தான் வெளிநாட்டவர் வேலைக்கே சேர முடியும். இது சர்வாதிகாரமல்ல.)
4. தமிழ்நாட்டில் எந்த ஒரு பொருளை விற்க அனுமதித்தாலும் அதற்க்கு தமிழ் பயனீட்டு முறை அல்லது தமிழ் இடைமுகம் (Tamil User Interface) இருந்தால் மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். இது இல்லாத ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் அனைத்து பொருட்களும் அடுத்த ஆறு மாத காலத்திற்க்குள் இந்த வசதியைக் கொடுத்தல் கட்டாயம்.
5. நவீன உலகத் தமிழ் சங்கம் தமிழ் நாட்டில் அமைந்திடல் வேண்டும். அதன் தலையாய கடமையே தமிழைப் பாது காப்பதும் வளப்பதுமாக இருத்தல் வேண்டும்.
6. நவீன உலகத் தமிழ் சங்கத்திற்க்கு போதிய அதிகாரமும் உரிமையும் வழங்கிடல் வேண்டும். எந்த அரசு வந்தாலும் அதை ஆதரிக்கும் வகை செய்தல் வேண்டும். அம்மன்றம் ஆண்டுக்கு நான்கு முறை கூடி தம் கடமைகள் சரியாக நடக்கின்றனவா என்று ஆராய்ந்து பார்த்தல் வேண்டும். படிப்படியான திட்டங்களையும் அவற்றை அமுலாக்கும் திட்டத்தையும் மேற்பார்வை பார்த்திடல் வேண்டும்.
7. தமிழ்த்திருநாள் ஆண்டிற்கொருமுறை கொண்டாடுதல் வேண்டும். இன்றிருப்பது போல் அல்லாது தமிழ்க் கலைநிகழ்ச்சிகளுடனும் (கரகாட்டம் லெஸ்ஸிம் ஆடுபுலியாட்டம் கபடி சிலம்பாட்டம் போன்று...) போட்டிகளுடனும் சிறப்பாகக் கொண்டாடுதல் வேண்டும்.
8. தொலைக்காட்சி செய்தித்தாள் வானொலி ஊடகங்கள் (Media) போன்றவைகளில் தமிழ்-ஆங்கில பயன்பாட்டை ஒழுங்கு முறை செய்திடல் வேண்டும். மீறுபவர்களுக்கு வலிய தண்டனை மொழிதல் வேண்டும். – இதில் என்னன்ன செய்யலாம் செய்யக்கூடாது என்பதை தெளிவாக விரிவாக உரைத்தல் வேண்டும். விளம்பரப் பலகைகள் முற்றிலுமாக தமிழைத் தாங்கியே இருத்தல் வேண்டும். வியாபார தேவையுள்ள இடங்களிலும், சுற்றுலாத் தலங்களிலும் மற்ற பிற இன்றியமையாத இடங்களிலும் 5க்கு 1 என்ற அளவு விகிதத்தில் தமிழ்-ஆங்கில பதிப்போடு இருத்தல் வேண்டும்.
9. அரசு அலுவலகம் மற்றும் பிற அலுவலகங்களிலும் தகவல் பரிமாற்றம் தமிழிலேயே நடைபெற வேண்டும்.
10. மேற்கூறிய ஒன்பது முறைகளில் எந்த மாற்றம் கொண்டு வந்தாலும் அது தமிழுக்கு வளத்தைக் கொடுப்பதாக அமைந்திருந்தால் மட்டுமே ஏற்கப்பட வேண்டும். இத்திட்டங்களை எதிர்ப்பவர்களும் மீறுபவர்களும் இந்தியக் குடியுரிமை ரத்து செய்திட வேண்டும்.


எதிர்ப்பு

இத்திட்டங்களுக்கு இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகளும்
அவர்களின் கூலியாட்களும் வியாபாரிகள் மற்றும் வியாபார நோக்கில்
பள்ளி கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்களும் உடனடியாக கடும் எதிர்ப்பு
தெரிவிப்பர். வேடிக்கை என்னவென்றால் தமிழைக் காக்க வேண்டிய
இவர்களே நம் எதிரிக்காக வாதாடுவார்கள். தமிழுக்கு மகனாக இருந்து
கொண்டு தமிழ்நாட்டில் காற்றை சுவாசித்துக் கொண்டு தமிழுக்கே எதிராக
பேசுவார்கள். பந்த் அறிவிப்பார்கள்.

ஆனால் ஊசி குத்துவது வலிக்கத்தான் செய்யும். ஆனால் அது நம்மை
நோயிலிருந்து பாதுகாக்கவே என்பதையும் காலப் போக்கில் அது மிக்க
நன்மை தரும் என்பதையும் அவர்கட்கு உணர்த்துவது தமிழ் சங்கத்தின்
கடமையும் அதற்க்கு ஆதரவு தருவது தமிழக அரசின் கடமையும் ஆகும்.

இந்த வேளை தான் தமிழ் சரித்திரத்தில் மிக முக்கியமான நேரமாகும்.
தமிழின் வலிமையினைச் சோதனை செய்து உலகிற்க்குப் பறைசாற்றும்
காலமுமாகும். தமிழ்நாட்டில் ஆங்கிலத்திற்க்கு எதிரான போரில்
ஆங்கிலத்தை தூள்தூளாய் பொசுக்கிட தமிழர்களாகிய நாம் அனைவரும்
ஒரே காலில் நிற்கும் தருணமிது. இத்திட்டத்தை இன்று செயல்படுத்தாவிட்டால் இனி என்றுமே செயல்படுத்த முடியாது.

இத்திட்டங்களை இரவோடு இரவாக செயல்படுத்துவது சாத்தியமாகுமா
என்பது கேள்விக்குறியே. ஆனால் மெதுமெதுவாக செயல்படுத்துவது
இன்றியமையாதது.

இத்திட்டங்களைச் செயல்படுத்தாவிடில் ஆங்கிலம் தமிழ்நாட்டை
அடிமையாக்கும். இன்று இந்த பொழுது தமிழ் பல இடங்களில் செத்து விட்டது. உதாரணமாக எல்லா விளம்பரப் பலகைகளில் பற்பல கல்லூரி பள்ளிகளில் கைப் பேசிகளில் வளர்ந்து வரும் இளைய தலைமுறைகளின் வாயினில்... என்று பல இடங்களில் தமிழை ஏற்கனவே அடக்கம் செய்தாகிவிட்டது. இந்நிலை நீட்டித்தால் தமிழ் பழக்கம் சிறிது சிறிதாகக் குறைந்து இன்னும்
ஐம்பதே ஆண்டுகளில் தமிழ் மரணிக்கும். தமிழுக்கு சமாதிக்குக் கூட இடமிருக்காது. இது உறுதி. அவ்வாறு ஒரு நிலை வருவதற்க்குப் பதில் தமிழ்நாட்டைக் கடல் விழுங்கி தமிழர் அனைவரும் இறந்து போவது சாலச் சிறந்தது.

முடிவுரை

விழி. எழு. செயல்படு. செயல்படுத்து. இல்லையேல் சாவு.

ஔவையோ பாரதியோ இருந்தால் இப்படித்தான் கூறுவார்கள்.தமிழுக்கு மகனாயிரு. ஆங்கிலத்துக்கு மகனாயிருந்து தமிழைக் கொல்வதைவிட சாவது மேல்.

இந்த கட்டுரை பற்றிய கேள்வி-பதில்


தமிழ் மணம் நிறைந்த நீங்கள், இந்த பதிவில் வன்முறை தெரிகிறது என்று நான் குற்றம் சாட்டுகிறேன். இந்த குற்றசாட்டுக்கு உங்கள் மறுமொழி என்ன?.

முதலில் இந்த பெரிய மடலைப் படிக்கும் முன்... நான் யாவரையும் மிக்க மரியாதையுடன் மதிப்பவன். எல்லோரையும் அவர்களின் கொள்கைகளையும் மதிப்பவன். யாரையும் பழிப்பது என் நோக்கமல்ல. மேலே படியுங்கள்...... உங்களைப்பற்றி எனக்கு சிறிதளவே தெரியும். இருப்பினும் எனக்கு தெரிந்ததை வைத்து கூறுகிறேன். உங்களையும் என்னையும் மட்டும் எடுத்துக் கொண்டு பார்த்தோமேயானால் நீங்கள் உங்கள் வாழ்வில் கடந்து வந்த பாதையும் நான் என் வாழ்வில் கடந்து வந்த பாதையும் வேறுவேறாக இருக்கும். என் 22 வயது வரை கோபமே வந்தது கிடையாது. அப்போது உலகமும் எனக்கு தெரியாது. சில வருடங்களுக்கு முன்னர் உலகம் தெரிந்த பின்னர் மிகவும் ஆழமாக சிந்தித்தேன். இவ்வாறு செய்யக்கூடாது, இருப்பினும் என் சிந்தனை இப்படி ஓடியது::: ஒரு நேர்மையான ஓர் அரங்கில் தமிழ் மொழி சிறந்ததா இல்லை ஆங்கிலம் சிறந்ததா என்று போட்டி வைத்துப் பார்த்தால் சந்த நயத்திலிருந்து, சொல் நயம் வரை ஆங்கிலம் தமிழுக்குப் பின்னால் வெகு தூரம் இருக்கும் என்பது என் முடிவு. சில ஆங்கில பாடலைக் கேட்டால் வாயில் சிறு கற்களைப் போட்டுக் கொண்டு உரைநடை பேசுவது போல் இருக்கும். ஆனால், இத்தனை நல்ல சுவையும் தகுதிகளும் தமிழுக்கு இருந்தும் தமிழ் ஏன் உலகை ஆளவில்லை (இங்கு ஆளவில்லை என்ற சொல் சற்று கடுமையானது. பரவுவது.. இல்லை பயன்படுத்துவது என்பது சரியாக இருக்கும். இருப்பினும் விவாதத்திற்காக இதை பயன்படுத்துவதற்கு உரிமை கோருகிறேன்) என்ற வினா எழுந்தது. அப்போது தான் புரிந்தது, ஒரு மொழி புகழ் பெற அதன் சுவை மட்டும் போதாது. அதை உபயோக்கிக்கும் மக்கள் வலிமையுடன் இருக்க வேண்டும் என்று. ஆங்கிலத்தில் கூற வேண்டுமானால்...The Success behind English is not the language itself, but the PEOPLE behind it.வெள்ளைக்காரர்கள் வலுக்கட்டாயமாக அவர்களின் மொழியை சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் பல நாடுகளில் புகுத்தினார்கள். சில நூறாண்டுகளுக்கு முன்னர் அவர்கள் செய்த ரவுடித்தனத்தின் பலனை இன்று அவர்கள் அனுபவி்க்கிறார்கள் (உதாரணம்- ஆங்கிலக் குழந்தைகள் இன்று தொழில்நுட்பம் கற்றுக் கொள்ள அவர்கள் தாய் மொழி தவிர வேறு மொழி கற்க வேண்டியதில்லை). மேலும் இன்று அவர்களிடம் நிறைய பணம் இருப்பதால் அதை தொழில் நுட்ப வளர்ச்சிக்கு பயன்படுத்துகிறார்கள். அதிலும் முன்னேறுகிறார்கள். தமிழ் எப்படி உலகை ஆள முடியும் ???என்னிடம் பல கோடி அமெரிக்க வெள்ளி கொடுத்து அதை செலவு செய்ய சொன்னால், முதலில் அந்த பணத்தை தற்போதுள்ள தொழில்நுட்பத்தையெல்லாம் தமிழுக்கு மாற்ற உத்தரவிடுவேன். பின்னர், அனைத்து துறைகளிலும் தமிழில் ஆராய்ச்சி செய்யுமாறு வல்லுநர்களை ஏவிவிடுவேன். சில ஆண்டுகளில் தொழில்நுட்பம் தமிழில் வளர்ந்த பிறகு தமிழ் கற்றவருக்கு மட்டுமே அதை பயன்படுத்த அனுமதி கொடுப்பேன். இப்போது... யாவரும் முதலில் தமிழ் கற்றால் தான் தொழில்நுட்பம் பெற முடியும் என்ற நிலை வந்தால் தான் தமிழ் கற்பர். இப்படித்தான் தமிழால் உலகை ஆள முடியும்.அறிவுரை-இது பயங்கர வன்முறை என்று நீங்கள் கூறுவது எனக்கு கேட்கிறது. ஆனால் ஒன்றை உற்று நோக்க வேண்டும். எந்த மொழியானாலும் சம்மதம். எந்த மதமானாலும் எனக்கு சம்மதம் என்று கூறுபவர்கள் இந்தியர்களைப் பார்த்து மட்டும் தான் the so-called அறிவுரை கூறுவார்கள். இதே அறிவுரையை ஜார்ட் புஷ்ஷுக்கும், பின் லாடனுக்கும் இல்லை வேறு எந்த நாடானாலும் சரி, அங்கு சென்று அறிவுரை கூறுவார்களா.. மொழி என்றால் அது பிற மொழிக்கும் இடம் தர வேண்டும். கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. இதே அறிவுரையை ஜார்ஜ் புஷ்ஷோ இல்லை ஐ.நா.வோ ஏற்றுக் கொண்டு உலகில் உள்ள எல்லா பள்ளிக்கூடங்களிலும் தமிழை கற்றுக் கொடுப்பார்களா ??? இது சாத்தியமா.. சரி தமிழை ஏன் கற்றுக் கொடுக்க வேண்டும்.. வேறு எந்த மொழியாயினும் 3 மொழியை கற்க வேண்டும் என்று உலகில் எல்லா பள்ளிக்கூடத்திலும் ஆணையிடுவார்களா... நமக்கு அறிவுரை கூறுபவர்கள் இதை முயன்று பார்க்கட்டும்.எல்லா மதத்திற்கும் இடம் கொடுக்க வேண்டும் என்ற கொள்கையை ஏற்றுக் கொண்டு அவர்கள் தங்கள் நாட்டில் இருக்கும் சர்ச்சுகளையும் மசூதிகளையும் பராமரிக்க செலவிடும் பணத்தில், இனி சிறு தொகையை இந்து மற்றும் புத்த கோவில்கள் கட்டி பராமரிப்பதற்கும் இசைவார்களா ??? சமமாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறுபவர்கள் எல்லாம் ஏன் நம்மைப் பார்த்து மட்டும் கூற வேண்டும் ??? இவர்கள் வேறு யாரிடமும் இதே அறிவுரையைக் கூற மாட்டார்கள்.தீவிரமாக இருப்பது என்பது இயல்பாக நம்முடைய ரத்தத்தில் இல்லாத பண்பு. நாம் என்ன சொன்னாலும் வெகுவாக ஆராயாமல் ஏற்றுக் கொள்வோம். நம்முடைய இந்த பண்பே மிக சிறந்த பண்புதான். ஐடியலான உலகில் இது மிகவும் போற்றத்தக்கது. ஆனால் இந்த உலகம் அப்படிப்பட்டதல்ல. உலகில் இருக்கும் யாவரும் கையில் கத்தியுடனும் ஆயுதத்துடனும் இருக்கும் போது நாம் மட்டும் ஏதும் இல்லாமல் நான் நல்ல பிள்ளை என்று இருந்தால் நம்மை ஒருவன் குத்தி கொன்று விட்டுத்தான் போவான். 17 முறை தோற்ற கோரி முகமதுவை ( பெயர் சரியா தெரியவில்லை) பாவம் பிழைத்துப்போ என்று உயிர் பிச்சை கொடுத்தவர் காஷ்மீர் ராஜா. 18 வது முறை அவன் ஜெயித்த பின்னே முதலில் அவன் செய்தது அந்த காஷ்மீர் ராஜாவைக் கொடூரமாக குத்திக் கொன்றது தான். அந்த அனுபவத்திலிருந்து நாம் இன்னும் பாடம் கற்கவில்லையென்றால்.....அது மட்டுமா. காந்தியடிகளின் அகிம்சைப் போராட்டம் மிகவும் தெய்வீகமானது. ஆனால், அதை மனிதர்களுக்கு எதிராகத்தான் பயன்படுத்தனுமே தவிர ஆங்கிலேய மிருகங்களுக்கு எதிராக அல்ல.. உதாரணத்துக்கு ஜாலியன் வாலாபாக் படுகொலையின் போது காந்தியடிகளும் அந்த கூட்டத்தில் இருந்திருந்தால் அவர் அப்போவே வன்முறை தீவிரவாதத்துக்கு பலியாகியிருப்பார். ஏதோ அவர் செய்த புண்ணியம்... சுதந்திர காற்றை சுவாசித்து விட்டு அதே வன்முறைக்கு கோட்சேவால் பலியானார். சிங்கள ராணுவம் செய்யும் அட்டூழியங்களைப் பார்த்தும் சாந்தமாக அமைதியாக இருந்தால் நமக்கு வேறு பெயர். இல்லை காந்தியடிகளின் அகிம்சையை கடைப்பிடித்திருந்தால் இன்று என்னவாகியிருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. சமாதானம் கூறும் பிறர் எல்லாம் அடுத்தவனுக்கு சோறு ஆக்கிப் போடுபவர்கள் போல். சோற்றில் விசம் இருக்கிறதா இல்லை பல்லி இருக்கிறா என்பது பற்றிய கவலை அவர்களுக்கிருக்காது.இதற்காக நான் வன்முறையில் ஈடுபடுங்கள் என்று கூறவில்லை. வம்பு சண்டைக்கு போகாதீர்கள். ஆனால் அதே சமயம் வந்த சண்டையை விடாதீர்கள் என்ற கோட்பாடு நன்று என்றுதான். கூறுகிறேன். மேலும், ஆங்கிலத்துக்கு சொந்தக்காரர்களான வெள்ளைக்காரர்கள் பொதுவாக நற்குணம் படைத்தவர்கள் அல்ல. அவர்களின் குணங்கள் பல மிருகங்களின் குணங்களுக்கு ஒப்பாகும். இதில் இன்னும் நான் சுட்டிக்காட்டி கூற விரும்பவில்லை. அவர்களின் ஆங்கிலம் பரவி புகழ் பெற்ற அளவிற்கு அவர்களுக்குத் தகுதியும் கிடையாது. இன்று நான் இங்கிலாந்தில் ஏதோ ஒரு ஊரில் தெருவில் நடந்து போனால் என் மேல் கல் எறிகிறார்கள். இன்னொரு ஊரில் குடித்து முடித்த பீர் பாட்டிலை என் மேல் எறிகிறார்கள். இன்னொரு ஊரில் என்னை கைபிடித்து இழுத்து வம்பு சண்டைக்கு இழுக்கிறார்கள். கேட்கவே கூசும் தகாத வார்தைகளைக் கூறி திட்டுகிறார்கள் வீதிகளில். சில ஊர்களில் இரவு 7 மணிக்கு மேல் நடமாடவே முடியவில்லை. கேட்டால் இனவெறியாம். 12 வயதிலிருந்து 23 வயது வரையுள்ள வாலிபர்கள் எல்லாம் கையில் கத்தி இல்லை துப்பாக்கியோடு அலைகிறார்கள். நான் இது நம் நாடு இல்லை என்ற ஒரே காரணத்தினால் பொறுத்தப்போகிறேன். என் உடமைக்கோ உயிருக்கோ ஆபத்து வந்தால் ஒரு கை பார்த்து விடுவேன். இங்கு உள்ள காவல் நிலையத்தில் வேலை பார்ப்பதற்கு ஆட்கள் இல்லை. பல காவல் நிலையங்களை மூடுகிறார்கள். இவர்களெல்லாம் ராணுவத்தினராய் ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் சுரண்டி, பிச்சை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் மேலே கூறியிருக்கும் சம்பவங்கள் எல்லாம் மிகச் சிறியதே. பொறுத்துக் கொள்ளக்கூடியதே. சரி எங்கோ ஆரம்பித்து எங்கோ போய்விட்டேன்... தாய் மொழியில் கல்வி கற்பது என்பது மிக முக்கியமான பிறப்புரிமை. இந்த உரிமையை நாம் தான் நமக்கு கொடுக்க வேண்டும். பின் லாடன் வந்து கொடுக்க மாட்டான். இது புண்பட்ட நெஞ்சு.. அது தான் அவ்வப்போது சிறிது வன்முறை காட்டுவது போல் எழுதிவிடுகிறது...

No comments: