Saturday 14 June 2008

வளரும் தமிழ் மூடர்கள்

வளரும் தமிழ் மூடர்கள்
(இந்த கட்டுரை எழுதிய ஆண்டு 1998)


பிறந்த நாளிலிருந்து நான் தமிழ் காற்றை சுவாசிக்கிறேன். தமிழ்
மண்ணில் தவழ்ந்து நடக்கக் கற்றேன். என் தாயாரிடம் நான் முதலில்
கற்ற வார்த்தை "மம்மி". பிறகு நான் அழைக்க கற்றுக் கொண்டது
"டாடி".

அகர முதல எழுத்தை விட எனக்கு "twinkile twinkle little star.." கற்றுக்
கொடுத்தார்கள். எங்கள் பக்கத்து வீட்டு மேதாவி "what is your name ?"
என்பதற்கு நான் "my name is george bush" என்று நான் எனக்கு கற்று
கொடுத்ததை கூறியவுடன் அவர் என்னை "very very goooooooddd..." என்று
உற்சாகப் படுத்தியவுடன் மகிழ்ந்து போனேன்.

"matriculation school" தந்த "அறிவு ஒளி" யால் தாமஸ் ஆல்வா எடிசன்
எவ்வளவு பெரிய மேதாவி என்றறிந்தேன். அமெரிக்கர்களின் விண்வெளி
சாதனைகளையும் அணுவை பிளந்து சக்தி பெற்றதையும் கண்டு வியந்தேன்.
அந்த சொர்க்க நாட்டிற்கு செல்ல ஏராளமான ஏக்கத்தை நம்
சமுதாயத்தில் பெற்றேன்.

இந்தியாவிலிருந்து வீசிய கணிப்பொறி காற்றில் ஓர் தூசியாக நானும்
அமெரிக்கா சென்றேன்.

ஆகா... என்னே மேலை நாட்டவர்களின் திறமை ? அவர்களின்
அறிவுத்திறனென்ன... எதை செய்தாலும் அதை சிறப்பாகச் செய்வதில்
ஈடுஇணையுண்டோ ? மேலை நாடுகளில் வாழ்பவர்கள் பாக்கியவான்கள்.
நம் நாட்டில் வாழ்பவர்கள் துர்அதிர்ஷ்டசாலிகள் என்று எண்ணிணேன்.

காலம் சுழன்றது. என் மனப்பக்குவம் வளரத் தொடங்கியது.

உலக வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினேன். ஒவ்வொரு மனித
கூட்டத்தின் குணங்களை உணரத் தொடங்கினேன்.

நம் நாட்டில் நம் முன்னோர்கள் 5000 ஆண்டிற்கும் மேல் வாழ்ந்த
வாழ்க்கையின் அனுபவத்தினை உணர்ந்தேன். அமெரிக்கர்கள் வெறும்
400 ஆண்டுகளில் கட்டிய உலகத்தையும் அறிந்து கொண்டேன்.
அவர்களின் ஆதிக்க வெறி, பொருளாதாரத்தை வைத்து உலகை
ஏமாற்றும் விதம் போன்ற அமெரிக்கர்களின் மறு பக்கத்தை பார்க்க
ஆரம்பித்தேன்.

என் பிறப்பின் சிறப்பையும், என் குலத்தின் பெருமையையும் உணரத்
தொடங்கினேன். நான் வளர்ந்து வந்த பாதையைப் பார்த்து மனம்
குமுறினேன்.

முதலில் george bush என்ற என் பெயரை அகத்தியன் என்று மாற்றினேன்.
தமிழகத்திலிருந்து தமிழ் இலக்கண இலக்கியங்கள் எடுத்து வந்து
கற்க ஆரம்பித்தேன். என் வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் இனி
தமிழின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவதென தீர்மானித்து இப்போது
செயல் பட்டுக் கொண்டிருக்கிறேன்.

தமிழ் தந்த காற்றை சுவாசித்த நான் ஆங்கிலம், சீனம் போன்ற பிற
மொழி பயின்றாலும் என் இறுதி மூச்சு இருக்கும் வரை தமிழின்
முன்னேற்றத்திற்கு பாடுபட்டு, பிறர்க்கும் முன்னோடியாக திகழவேண்டும்
என்பதை மனதில் தின்னமாக வைத்துக் கொண்டேன்.

ஆனால், இந்த பொழுது, என்னைப் போல் அறியாமையினால்
வளர்ந்து கொண்டிருக்கும் பற்பல தமிழர்களை எண்ணினால் மிகவும்
வருத்தமாக இருக்கிறது. பணத்திற்காகவும், அறியாமையினாலும்
அவர்களை வளர்த்து விடுபவர்களை எண்ணினால் கோபம் வருகிறது.
ஆனாலும், என்னைப்போல் அவர்களும் ஒரு நாள் வரலாற்றின்
கதவுகளைத் திறந்து பார்க்கும் போது உண்மை உணர்வார்கள் என்ற
நம்பிக்கையோடு இன்று இரவு படுக்கைகுச் செல்கிறேன்.

அகத்தியன்.


(இந்த கட்டுரை எழுதி இப்போது 10 ஆண்டுகளாகிவிட்டது. இப்போது தமிழ் நாடு முழுவதையும் ஆங்கிலம் பேச வைத்து முட்டாள் தேசமாக மாற்றிவிட்டார்கள்)

3 comments:

SkyBlue said...

நண்பர் வீர தமிழருக்கு தயவு செய்து பார்க்கவும்

http://islamicnews.wordpress.com/2007/06/27/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%9A/

they write bad about RAMA

SkyBlue said...

நண்பரே தயவு செய்து பார்க்கவும்

http://islamicnews.wordpress.com/2007/06/27/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%9A/

they write bad about RAMA.. please forward as many as hindus,,,,,

சிவமீனா said...

தோழரே. இந்த உலகில் ஏகப்பட்ட சாக்கடை ஓடுகிறது. அதை எல்லாவற்றையும் நாம் எடுத்து உண்ணும் உணவோடு சேர்த்து உண்ண வேண்டுமா ? தீயது நீக்கி நல்லனவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு வாழ்ந்தால் தான் நாம் நிம்மதியாக வாழ முடியும். இந்த காலத்தில் வாய்க்கு வந்த படியெல்லாம் வரலாற்றை மாற்றுகிறார்கள். மரியாதை தெரியாமல் எல்லோரையும் ஏசுகிறார்கள். கலிகாலம். நாம் நமக்கு தேவையானவற்றை மட்டும் நல்லவைகளாக எடுத்து கொண்டு நிம்மதியாக வாழ்வது தான் சிறந்தது என்பது என்னுடைய தாழ்வான கருத்து.