Friday 23 November 2007

முத்திரை வாசகங்கள் - பஞ்ச் டயலாக்

முத்திரை வாசகங்கள்

சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

வலிமை மிக்க இரும்பு மனிதர் எம் நாட்டுக்கு தலைவராக வேண்டும். அவர் எம் தேசத்தின் துஷ்டர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கி எம் தேசத்தை தலை நிமிர்த்திடல் வேண்டும்.

10 ஆண்டுகளுக்கு முன்னர் நான் 98% ஆங்கிலமும் 2% தமிழும் பயன்படுத்தி வந்தேன். இன்று, 80% தமிழும், 20% ஆங்கிலமும் பயன்படுத்தி வருகிறேன். அந்த 20% என் அலுவலகத்தில் தேவையின் போது மட்டும் தான். வாழ்க தமிழ்.

அளவுக்கு மீறிய ஆங்கிலத்தை அழி. தமிழுக்கு மகனாயிரு. இல்லை செத்தொழி. எதிரிக்கு மகனாயிருந்து தமிழைக் கொல்லாதே.

தமிழில் ஆங்கிலத்தைக் கலக்காதே. முடிந்தால் ஆங்கிலத்தில் தமிழைக் கல.தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசிப்பார். இழித்துக் கொண்டே ஆங்கிலத்தில் பதிலுரைப்பான். ஆங்கிலேயனிடம் தமிழில் பேசிப்பார். எரிந்து கடிந்து முதலில் மொழிமாற்றம் செய்யச் சொல்வான்.

ஆங்கிலம் கத்தியைப் போன்றது. அதை உங்கள் சமையலறை வெங்காயத்தை வெட்ட மட்டும் பயன் படுத்துவீர். வீட்டில் உள்ளவர்களையும் தமிழன்னையையும் கொல்வதற்க்கல்லவே.

சார்.. இதுல மசாலாவே இல்ல.. கொஞ்சம் மசாலா கலந்து சொல்லுங்களேன்....

ஆங்கிலம் பாத்ரூம் செருப்பைப் போன்றது.. அதை வீட்டு அடுக்களையில் நீங்கள் சாப்பிடும் தட்டின் மேல் வைக்காதீர்கள்...

சார்... இன்னும் கொஞ்சம் மசாலா தூக்கல் பண்ணுங்க சார்...

ஆங்கிலம் ஆணுறையைப் போன்றது... பயன்படுத்தியபின் தூக்கியெறிந்து விடவும்.. அதைப்போய் வாயில் போட்டு சூயிங்கம் போல் மெல்ல வேண்டுமா...

சரி சரி.. போதும் சார்.. இதோட நிறுத்திக்கறேன்...

தமிழே உயிர் !!! ஆங்கிலம் வியாபாரத்திற்காக மட்டுமே..

No comments: