Tuesday 30 October 2007

தமிழ் உதவி கையேடு

பொருளடக்கம்


தமிழ் ஒருங்குறி (Unicode) என்றால்
தமிழ் ஒருங்குறியை எந்தெந்த இயக்குதளங்கள் ஆதரிக்கின்றன ?
விண்டோஸ்-XP இல் ஆங்கிலத்தோடு, தமிழையும் சேர்த்து இயக்க முடியுமா ?
விண்டோஸ்-XP யை முழுவதுமாக தமிழுக்கு மாற்ற முடியுமா ?
தமிழ் ஒருங்குறி விசைப்பலகை எப்படி அமைக்கப்பட்டுள்ளது ?
பழைய தமிழ் எழுத்துக்களை ஒருங்குறிக்கு மாற்ற முடியுமா ?
தமிழ் பக்கங்களை எப்படி தேடுவது ?
சில முக்கியமான தமிழ் பக்கங்கள் சொல்லுங்களேன் -
தமிழ் ஆங்கில அகராதிகள் இருக்கிறதா ?
தமிழில் தட்டச்சு செய்வது கடினமா ?



தமிழ் ஒருங்குறி (Unicode) என்றால் என்ன
நல்ல வேளை. ஐரோப்பா கண்டம் முழுவதும் ஆங்கிலத்தில் இல்லை. இல்லையென்றால் இன்று இந்தியா முழுவதுமே ஆங்கிலம் என்ற சிவப்பு பெயிண்டை முகத்தில் அடித்து நம் மொழியையும் தோண்டிப் புதைத்திருப்பார்கள் நம் ஆட்கள். ஆங்கிலம் இணையத்தை ஆதிக்கம் செய்த காலம் எப்போதோ மலையேறி விட்டது. இன்னும் உங்களுக்குத் தமிழில் தட்டச்சு செய்ய தெரியவில்லையென்றால் நீங்கள் தொழில்நுட்பத்தில் பின்தங்கியிருக்கிறீர்கள் இல்லையென்றால் ஆங்கில குதிரையிலேயே இனி உங்கள் சந்ததி முழுக்க சவாரி செய்ய முடிவு கட்டி விட்டீர்கள் என்று பொருள். சரி தானே ?? சரி, விசயத்துக்கு வருவோம்.
(யூனிக்கோடு) ஒருங்குறி எந்த ஒரு மொழியிலும், எந்த ஓர் இயங்கு தளத்திலும், எந்த ஒரு நிரலிலும், ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்துவமான எண்ணொன்றை வழங்குகிறது. கீழிருக்கும் சுட்டியில் ஒருங்குறியைப் பற்றிய முழு தகவலையும் காண்க-
http://www.unicode.org/standard/translations/tamil.html
ஆங்கிலத்தில்
http://www.unicode.org/standard/WhatIsUnicode.html
மேலும் ஒருங்குறியைப் பற்றி நான் சொல்வதைவிட மிக அழகாக இந்த பக்கத்திலேயே இருக்கிறது.
http://www.blogger.com/
இன்னொரு அழகான சுட்டி
http://www.suratha.com/tamilunicode.html



தமிழ் ஒருங்குறியை எந்தெந்த இயக்குதளங்கள் ஆதரிக்கின்றன
க்னூ/லினக்ஸ்
இலவச பி.எஸ்.டி (FreeBSD)
சன் சொலாரிஸ்
யுனிக்ஸ்
மாக் ஓ.எஸ்
மைக்ரோசாப்ட் விண்டோஸ்
http://ta.wikipedia.org/wiki/இயங்கு_தளம்
இனிமேல் ஒருங்குறியையும் தமிழையும் ஆதரிக்காத இயக்குதளங்களும் மென்பொருட்களும் பெரும்பாலும் சந்தையிலிருந்து இறந்து விடும்.


விண்டோஸ்-XP இல் ஆங்கிலத்தோடு, தமிழையும் சேர்த்து இயக்க முடியுமா
1. விண்டோஸ்-XP இல் ஒருங்குறி சார்ந்த லதா என்ற தமிழ் எழுத்துரு முதலிலேயே நிறுவப்பட்டிருக்கும்.
2. Control Panel, in Regional/Languages Options க்கு சென்று அங்கு Indic/Asian Language option ஐ குறியிடுதல் வேண்டும். இதன் பிறகு உங்கள் இயக்குதளம் சில கோப்புகளை நிறுவும். உங்கள கணினியை ஒரு முறை reboot செய்ய வேண்டியது இருக்கலாம்.
3. மீண்டும் Control Panel, in Regional/Languages Options சென்று Details ஐ சொடுக்கி, Add ஐ சொடுக்கி Input Language ல் தமிழைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Key Settings ஐ சொடுக்கி ஆங்கிலத்திற்கும்-தமிழுக்கும் மாற்றும் பட்டன்களைத் தேர்ந்தெடுத்து அமைத்துக் கொள்ளவும்.
4. இனி, UTF-8 encoding ஐ உங்கள் உலாவியில் தேர்ந்தெடு்த்து தமிழ் பக்கங்களைப் பார்வையிடலாம். Wordpad/Word போன்ற எல்லா பயன்பாடுகளிலும் பட்டன்களை இயக்கி தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் எளிதாக மாறிடலாம்.



விண்டோஸ்-XP யை முழுவதுமாக தமிழுக்கு மாற்ற முடியுமா
பாசாஇந்தியா தரும் இடைமுகத்தை உங்கள் கணினியில் நிறுவினால், உங்கள் கணினி முழுவதுமே தமிழ் மயம்.
http://www.bhashaindia.com/downloadsV2/Category.aspx?ID=2
மேலும் இந்த வலைதளத்தை உலாவி வாருங்கள்.
http://www.bhashaindia.com/Patrons/PatronsHome.htm?lang=ta



தமிழ் ஒருங்குறி விசைப்பலகை எப்படி அமைக்கப்பட்டுள்ளது
http://meenakumar.googlepages.com/UnicodeTamilKeyMap-Med.jpg/UnicodeTamilKeyMap-Med-full.jpg

மைக்ரோசாப்ட்டின் தமிழ் விசை பலகையமைப்பு
http://www.microsoft.com/globaldev/keyboards/kbdintam.htm

பழைய தமிழ் எழுத்துக்களை ஒருங்குறிக்கு மாற்ற முடியுமா
இணையத்தில் பல்வேறு மாற்றும் மென்பொருட்கள் உள்ளன. உலாவிப் பாருங்கள். உதாரணத்திற்கு கீழே ஒன்று.
http://www.suratha.com/reader.htm

தமிழ் பக்கங்களை எப்படி தேடுவது
கூகுள் இணைய தளத்திலேயே தமிழில் தட்டச்சு செய்து தேடலாம். மேலும் தமிழ் ஒருங்குறி சார்ந்த இணைய தளங்கள் இன்று எண்ணற்றவை இயங்குகின்றன.


சில முக்கியமான தமிழ் பக்கங்கள் சொல்லுங்களேன் -
மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்
சென்னை நூலகம்
தமிழ் நேசன்
தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
தமிழ் விக்கிப்பீடியா

மைக்கரோசாப்ட் தமிழ் இடைமுக தயாரிப்பு தகவலிறக்க மையம்
http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=0db2e8f9-79c4-4625-a07a-0cc1b341be7c&DisplayLang=ta
உபுண்டு தமிழில் - http://ubuntu.techintamil.org/
தமிழில் MSN http://content.msn.co.in/Tamil/Default
தமிழ் யாகூ http://in.tamil.yahoo.com/
தமிழ் செய்திகள் http://tamil.samachar.com/
ஆர்குட்டை முற்றிலும் தமிழில் மாற்றிட - Orkut: Settings -> Display Lanugauge:
தமிழ் மரபு அறக்கட்டளை - http://bharani.dli.ernet.in/thf/index.html
பிரிட்டிஷ் நூலக தமிழ் தொகுப்பு - http://www.e-mozi.com/bl_thf/bl_thf.html


தமிழ் ஆங்கில அகராதிகள் இருக்கிறதா ?
http://dictionary.sarma.co.in/default.aspx
இணையத்தில் இன்னும் நிறைய உள்ளன.. மேலும் தருகிறேன். காத்திருங்கள்.


தமிழில் தட்டச்சு செய்வது கடினமா
ஹா ஹா.. அல்வா சாப்பிடுவது கடினமா என்பதற்கு சமம் இந்த கேள்வி. ஆம். அல்வா சாப்பிட வேண்டுமானால், அல்வாவைப் பெற்று பிரிக்க வேண்டும். பின்னர் வாயைத் திறக்க வேண்டும். இலையில் இருக்கும் அல்வாவை கையிலோ இல்லை கரண்டியிலோ எடுத்து வாய் வரை சென்று ஊட்டி விட வேண்டும். பின்னர், கஷ்டப்பட்டு அல்வாவை வாயில் சுவைக்க வேண்டும். பின்னர் விழுங்க வேண்டும். சாப்பிட்டு முடித்தபின் கையை கழுவ வேண்டும். கொஞ்சம் சோம்பேறித்தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு முயன்றால் முடியாதது உள்ளதோ ??
சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் விசைப்பழக்கம்.

No comments: